பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுகளுக்கு அவை ஊன்றுகருத்துகளாகும். கூறியது கூறுவதாக அமையி னும் எடுத்துப் பொருத்தும் இடத்தேவையில் இவை குறையாகா. சிறு சிறு கருத்தும் தொடர்பு கருதியும், துணைமை கருதியும் இன்றியமையாதனவாகும். எனவே, ஒன்றையொன்று தொட்டுத் தொடரும் நோக்கில் ஆராய்வுப் பகுதிகள் பின்வரும் தலைப்புகளில் தொடர்கின்றன. 1. ஒளியில் ஒலி 2. ஒலியில் மொழி 3. மொழியில் தமிழ் 4. தமிழில் எழுத்து 5. எழுத்தில் சொல் 6. சொல்லில் பெயர் 7. பெயரில் உரி 8. உரியில் பனுவல் 9. பனுவலில் மணி: சூளாமணியா? சூடாமணியா? 10. மணியின் மண்டலவர் 11. சமயத் தாக்கம் 12. சமயத்தொடு வடமொழித்தாக்கம் 13. பொலிக தமிழ்ச் சொல்! இப்பதின் மூன்று பொருள்களில் ஆராய்வு செல்லும். தமிழ் ஒரு சொற்களஞ்சிய மொழி. தமிழ்ச் சொற்களஞ்சியத்தின் ஒரு பகுதி உரிச்சொல்லின் தொகுதிகள். இத்தொகுதியாக உருவாகிய நூல் 'உரிச்சொற் பனுவல் எனப்பெயர் பெற்றது. ஒன்றைப் புகுத்தி உரியதை மறைப்பது' எனனும் மொழிப் படையெடுப்பின் வஞ்ச நடைமுற்ைப்படி 'நிகண்டு என்னும் வடசொல் புகுத்தப்பெற்று 'உரிச்சோற் பனுவல்' என்னும் உரிய பெயர் மறைக்கப்பட்டது. படையெடுப்பு போட்ட இரும்புத்திரை இங்கு நீக்கப்பெற்று 'உரிச்சொற் பனுவல் என்னும் உரியூபெயரே கொள்ளப் பெறுகின்றது. 'உரிச்சொற் பனுவல் என்னும் தொடரின் நீட்சியைக் கருதி அதனைச் சுருக்கித் தொகுத்து, எழுத்தோட்டத்திற்கு எளிம்ை கொள்ளப்