பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர்த் செய்யுள்-17 17 வரன்,மறை முதலி, ஈசன் மானிட மேந்தி, சோதி, பிரமன்மாற் கரியோன், தானு, பிஞ்ஞகன், பினாக பாணி, பரமன்,எண் டோளன், பர்க்கன், பவன்,யோகி, பகவான், ஏகன், ! அரன்,உமா பதி, சிவன்பேர் அறுபத்தா றனந்தம் ஆமே.” பெயர்ப் பொருள் விளக்கம்: வரன்-மேலானவன் மான் இடம் ஏந்தி-மானை இடக்கையில் ஏந்தியவன் தானு-அசைவில்லாதவன் பிஞ்ஞகன்-தலைக்கோலம் உடையவன் பினாகம் பாணி-பினாகம் என்னும் வில்லைக் கையில் உடையவன் பரமன்-பீடுடையவன் பர்க்கன்-பேரொளி உடையவன் பவன்-அனைத்தையும் தோற்றுவிப்பவன் ஏகன்-ஒன்று என்னும் இன்றியமையாமை கொண்டவன் அரன்-உலகம் முடிவாக அழிப்பவன் உமாபதி-உமைக்குக் கணவன் அறுபத்தாறு-சிவன் பெயர்கள் 66 6丁ー、射Göy学 (17) பாட வேறுபாடு: 1 எண்டோளன் கூற்றைப் பதைத்திடி உதைத்த பாதன் அரனது நாமம் ஆறைத்திரட்டியாம் அனந்தம் மற்றும் ” இப்பாடத்தால் பர்க்கன், பகவான். ஏகன், உமாபதி என்னும் சிவனைப் பற்றிய சொல்லாட்சிகள் விடுபட்டனவாகும். 'சிவன் என்னும் பெயரே இல்லாமல் டோகும். எண்ணிக்கையும் வேறுபடும். எனவே, மேற்பாடம் கொள்ள4 பெற்றது. -