பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராய்வுரை 1. ஒளியில் ஒலி g & & - - o * w T F, - - ஒலிஎன்பதெல்லாம் செந்தமிழ் முழக்கம் ஒளிஎன்பதெல்லாம் தமிழ்க் கலைகளாம் ஒலியையும், ஒளியையும் தமிழ்ப்பார்வையில் இவ்வாறு வைத்தார் பாவேந்தர் பாரதிதாசனார். "*1? ஒளி கண்ணைத் திறந்தது; ஒலி காதைத் திறந்தது; இத்திறப்பு விழாக்களை இவை இரண்டும், தாம் பிறந்தவுடன் செய்யவில்லை. ஏனெனில் அப்போது கண்ணும் இல்லை; காதும் இல்லை. ஒளி, ஒலி எனும் இரண்டும் தோன்றிய எத்துணையோ கோடிக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னர்தான் கண்ணும் காதும் தோன்றின. ஒளியும் ஒலியும் பிற எந்த ஒன்றும் தோன்றாத காலத்திலிருந்தே பிறந்த இன்றியமையாத இயற்கைப் பிறவிகள். இன்றும். என்றும் - இவையிரண்டும் பிறவற்றையெல்லாம் அழிக்கும்வரை இவைதாம் உலகத்தின் உயிரோட்டங்கள். ஒளியும் ஒலியும் உடன்பிறப்புகள். வானவெளியில் ஒளிப்பிழம்புகள் தோன்றின. அவை உடுக்கள், விண் மீன்கள் எனப்பெறும் கோடிக்கணக்கானவை. அவற்றுள் ஓர் ஒளிப்பிழம்பு ஞாயிறு என்றும், கதிரவன் என்றும் நம்மால் அழைக்கப்பெற்றது. இது கெட்டிப் பொருளும் அன்று; நீர்மப் பொருளும் அன்று. உருகிய ஆவிக் கோளம். பொன்னை உருக்குகிறோம். ஓரளவு இளகி நீர்மமாக உருகுகிறது. மேலும் உருக்குகிறோம். மேலும் மேலும் வெப்பமூட்டுகிறோம்; மேலும் மேலும் மேலும் வெப்பம் ஏற்றுகிறோம். என்ன ஆகும்? உருகி உருகி 12 பாரதிதாசன்-இசையமுது-1