பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருகி ஆவி நிலையைப்பெறும். ஆஃா! தகதகத்து ஒளிக்கதிரை வீசும். இது போன்று உருகிய ஆவிதான் -ஆவிக்கோளந்தான் கதிர்களை வீசி நாம் கண் னால் நேர்பார்வையில் காணமுடியாதபடி தகதகக்கிறது; ஒளியை வழங்கு கிறது. இந்த ஆவிக்கோளத்தின் துகள்களால் வெப்ப அலைகள் நேர்கின்றன; இதற்குள்ளேயே நேர்கின்றன. அந்த வெப்ப அலைவுப் பகுதியை வெப்ப ஆவி இயக்கு கிறது. இந்த இயக்கத்தால் ஒலி அலை உண்டாகிறது. ஒளிக் கோளத்தில் ஒலியும் இசைக்கிறது. இவ்வகையில் கருதினால் ஒளி, ஒலி இரண்டும் ஒத்துத் தோன்றுவதை மேலோட்டமாக வைத்து நோக்கினால் இவை இரண்டும் உடன்பிறப்புகள் எனலாம். இந்தக் கதிரவனாம் ஒளிப்பிழம்பிலிருந்து நிலவுலகம். நிலவு, செவ்வாய் வெள்ளி, சனி முதலிய கோள்கள் தோன்றின. இக்கோள்களின் தோற்றத் திற்கு இரண்டு கொள்கைகள் காணப்பெற்றன. - ஒன்று: ஆவிக்கோலமாகவும், துகள்களாகவும் இருந்த ஞாயிற்றின் அண்டை யில் மற்றொரு பெரிய உடு நெருங்கியது. தன் ஈர்ப்பு ஆற்றலால் ஞாயிற்றின் ஒரு பகுதியை ஈர்த்தது. ஈர்ப்புக்கு வயப்பட்ட ஞாயிற்றின் பகுதியில் மாதுளம் பழத்தின் முட்டுபோல் ஒரு முட்டு உப்பித் துருத்தியது. துருத்திய முட்டு ஞாயிற்றிலிருந்து பிய்ந்து பலவாகச் சிதறிப் பூமியாக, செவ்வாயாக, நிலவாக என எட்டு கோள்களாக இன்றும் ஞர்யிற்றையே சுற்றிக்கொண்டுள்ளன. பேராசிரியர் சேம்பர்வின் என்பாரும், பேராசிரியர் மோல்டன் என்பாரும் வானத்தை ஆய்ந்து இதனை வெளியிட்டனர். இக்கொள்கையின்படி முட்டு பிய்ந்து சிதறியபோது ஒலி உண்டாயிற்று. மற்றொரு கொள்கை: ஞாயிற்றுடன் ம்ற்றொரு உடு மோதி இடித்ததால் ஞாயிற்றிலிருந்து சிதறிய துகள்கள் கோள்கள் ஆயின. இக்கொள்கைப்படி மோதி இடித்தபோது ஒலி உண்டாயிற்று. இடித்ததால் தோன்றிய ஒலியை இடியொலி என்னலாம். பின்னர் - பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் முகில்கள் தோன்றி அம்முகில்களின் இடையில் நேர்ந்த மின்னல் ஓட்டத்தால் எழுந்த மிகு