பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெப்பம் அங்குள்ள காற்றை அதிரவைத்தது. இந்த அதிர்ச்சியால் இடியொலி அலைகள் உண்டாயின. - இவ்வாறு ஒலியலைகள் ஒளியால் பிறக்கின்றன. இப்பிறப்பால் ஒலியைப் பிறப்பித்தது ஒளி என்றாகும். மேலோட்டமாக ஒளியையும் ஒவியையும் உடன்பிறப்புக்கள் என்றோம். ஆழ்ந்து நோக்கினால் ஒளி ஒலிக்குத் தாய் ஆகும். - தோன்றிய இடியொலி அலைகள் தம் வீச்சில் தேய்ந்து தேய்ந்து ஒய்ந்தன. இதுபோன்று ஒளியும் தேய்கிறது என்பர். ஆனால் அது ஒய இன்னும் எத்துணையோ கோடிக்கணக்கான ஆண்டுகள் பீடிக்கும், அதனையும் அறிய முயல்கின்றனர். அதுவரை கதிரவன் மற்றைக் கோள்களுக்கெல்லாம் ஒளி விளக்கு; உயிர் விளக்கு தாய்விளக்கு. இவ்விளக்குதான் அண்டத்தில் கோள்களை ஈன்றது. அதனால் இதனை அண்ட யோனி என்றனர். - இந்தத் தாய் ஒளிதான் அதனால் தோன்றி இயங்கும் உயிரினங்கள் இயங்கா உயிரினங்கள் ஆகியவற்றின் உடலையும், உயிரையும் வாழவைத்து வருகிறது. இத்துடன் ஒளிதான் (உயிர், உயிரற்ற) அப்பொருள்களை உருவப் பொருள்களாகக் காட்டுகிறது. காணும் கண்ணும் ஒளியாலேயே க்ாண்கிறது. ஒளி இன்றேல் பொருளின் இயக்கமும் இல்லை; காட்சிப்பாடும் இல்லை. புல் . பூண்டு, செடி, கொடி, மரம், புழு, பூச்சி, பறவை. விலங்கு, மாந்தர் என்னும் ஒவ்வொரு தனித்தனி உயிரின் வாழ்விற்கும் ஒளி உதவுகின்றது. அவற்றின் உணர்ச்சி வெளிப்பாட்டிற்கு ஒலி உதவுகின்றது. இவை இரண் டுமே உயிர்க ளின் இயல்பு, வலிமை, வளர்ச்சி, செயற்பாடு முதலியவற்றைத் தருகின்றன. இவற்றால் இயங்கும் மாந்தனோ தன் அறிவின் அழுத்தத்தாலும் துணுக்கத்தாலும் இவை இரண்டின் இயல்புகள், வலிமைகள், மாற்றங்கள் செயற்பாடுகள் முதலியவற்றைக் கண்டறிகின்றான்; கணிக்கின்றான். இவ் வகையில் மாந்தன் ஒளி, ஒலி இரண்டையும் தன் அறிவகப்படுத்தி மேம்பட்டு வருகின்றான். - ஒளியலை, ஒலியலைகளின் இயல்பை ஐசக் நியூட்டன் (Isaak Newton) ஆய்ந்து கண்டார்.19 . . . . . . . . . 1. தி. பி. நவநீதகிருட்டிணன்: கலைக்களஞ்சியம்-2 பக்-698