பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளி அலை ஒலி அலைக்கில்லாத மின்கவர்ச்சி உடையது என்று 1860 இல் சேம்சு கிளார்க்கு மாக்சுவெல் (James Clerk Maxwel) கண்டறிந் தார்.14 ஒளிவீச்சின் விரைவு (ஒளிவேகம்) ஒரு நொடிக்கு 1,86,284 மைல்கள் என்று ஆல்பர்ட் ஏ மைக்கல்சன் (Albert A Michalson) கணித்தார்.ே இந்த ஆய்வின் வளர்ச்சியில் ஒளி ஆண்டு கணிக்கப்பெற்றுள்ளது. ஒர் ஒளி ஆண்டு (Light year) என்பது, அவ்வொளிசெல்லும் தொலைவைக் குறிக்கும். ஆறு இலட்சம் கோடி (6,00,000,00,00,000) மைல்கள் ஒர் ஒளி ஆண்டு என்னும் கொள்கை கடைபிடிக்கப்பெறுகிறது. ... - ஒலியலையில் விரைவு (ஒலி வேகம்) ஒரு நொடிக்கு 380.334 என்று Gori l-ġó öğsui Gyir@Li su TaisīG-# GGTả (Schroder Vander Kolk என் பார். 16 ஞாயிற்றில் கரும்புள்ளிகள் உள்ளன. அவை ஞாயிற்றுக் களங்கங்கள்' எனப்படுகின்றன. தொலைநோக்காடிவழி அவற்றைக் காணலாம். பெயர் கரும்புள்ளி எனப்படினும் அவை கரியவை அல்லவாம். ஞாயிற்றின் வெப்பச் சூழல் அவ்வாறு தோன்றினும் அவையும் ஒளி உடையனவே என்கின்றனர். ஞாயிற்றின் அளவற்ற ஒளிப்பிழம்பில் இவ்வொளி (கரும்புள்ளி ஒளி) கருமை யாகத் தோற்றமளிக்கின்றது என்கின்றனர். இக் கரும்புள்ளிகள் பெரிய அளவிலும் தோன்றுவதுண்டு, அக்காலங் களில் அவற்றின் தாக்கத்தால் பூமியில் கவர்ச்சிப்புயல் உண்டாகும். இதனை ஆராய்ந்தோர் இக்கரும்புள்ளிகளுக்கும் நம் நிலத்தில் வாழும் உயிர்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கருதுகின்றனர். இதுதான் -ஞாயிற்றின் இவ்வொளிதான்-கரும்புள்ளி ஒளிதான் நாம் இங்கு நினைவிற்கொள்ள வேண்டியதாகும் , இதனைக் காட்டவே ஒளி, ஒலி பற்றிய இவ்விளக்கம் இங்கு இடம் பெற்றது. 14 தி. பி. நவநீதகிருட்டிணன்: கலைக்களஞ்சியம்-2 பக். 698 15 1 : 势列 - , , 699 16 த முருகையன் * * - ,, 682 17 எம். வெங்கடராமன். • * 5 * * A 34 9 à-a-2