பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்மைக் காலத்தில் இக்கரும்புள்ளிகளின் தாக்கத்தால் நிலவுலகில் போர்கள் நிகழ்கின்றன என்றும், மாந்தனின் உணர்விலும் மாற்றங்கள் நேர்கின்றன என்றும் கண்டுள்ளனர். இக்கருத்துக்களும் நினைவிற்கொள்ள வேண்டியனவாகும். இதுவரை கண்டவற்றிலிருந்து நினைவில் இருத்த வேண்டியவை மூன்று, ஒவ்வொன்றும் ஒவ்வொரு முத்திரைப்பதிவு. முதல் முத்திரை: ஞாயிற்றின் ஒளி, ஒலி அலைகளின் விரைவு: இரண்டாவது முத்திரை: ஞாயிற்றின் கரும்புள்ளித் தோற்றத்திற்கும், நம் நில உலகத்து உயிர் களுக்கும் தொடர்பு உண்டு; - மூன்றாவது முத்திரை: ஞாயிற்றின் கரும்புள்ளிகளால் உலக மாந்தனின் உணர்வுகள் மாற்றம் அடைகின்றன. இம்முத்திரைப் பதிவுகள் உரிய இடங்களில் முத்திரை 1, 2, 3 என்று பொருத்திக் காட்டப்பெறும், ஞாயிற்றைப் பற்றிய கனடுபிடிப்புகளை யும், கணிப்புகளையும் ஆழ்ந்து நினைந்தால் மாந்தனின் அறிவாற்றல் புலப் படும். அந்த அறிவாற்றல், ஒளியாற்றலையும், ஒலியாற்றலையும் தட்டிக் கொட்டிப் பார்த்துள்ளது என்பதை உணரலாம், இதனினும் மேலாக ஒளியைப்பற்றி, ஒலியைப்பற்றி மாந்தன் அவற்றின் அடிப்படைத் தொடர்பிலிருந்து ஒரு மாற்றம் செய்துள்ளமை நினைக்கத்தக்கது. அஃது என்ன மாற்றம்? 2. ஒலியில் மொழி ஆவிப் பிழம்பாகிய ஞாயிற்றிலிருந்து பிய்ந்து சிதறிய சிதறலில் ஒன்று தான் இப்பூவுலகம். இது இருநூறு கோடி ஆண்டுகளுக்குமுன் நேர்ந்தது என்பர். பிய்ந்தபோது இஃதும் ஆவிப்பிழம்பாக இருந்தது. தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் ஈர்ப்பு, பிய்ந்து சிதறிய பூமிக்கும் இருந்தது. அஃதும் தன்னைத்தானே சுற்றிக்கொண்டது. அச்சுற்றலுடன் பல்லாண்டு - 1. எம். வெங்கடராமன் கலைக்களஞ்சியம்-5 ப்க். 135 †ሶ