பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-49 அம்பணத்தி-மரக்கால் என்னும் கூத்தாடியவள் சமரி-போரிடுபவள் - - பாலைக்கிழத்தி-பாலைநிலத்தெய்வம் சயமகள்-வெற்றிமகள் - மகிடற்செற்றாள்-மகிடாசுரனை அழித்தவள் கொற்றவை-வெற்றி உடையவள் (கொற்றம்-வெற்றி) சக்கிரபாணி-சக்கிரப்படையைக் கையில்கொண்டவள் விமலை-மலமற்றவள் கலையானத்தி-மானை ஊர்தியாகக்கொண்டவள் விசையை-வெற்றியுடையவள் நாரணி-நீரை இடமாகக்கொண்டவள் தங்கை விந்தை-வியக்கத்தக்க திறனுடையவள் துர்க்கை தொடர்ச்சி நீலியேநெடியகார்த்தியாயனிமே திச்சென்னி மேலிடருறமிதித்தமெல்லியல் கெளரி ைபயை மாலினுக்கிளையநங்கைபகவதிவாள்கைக்கொண்டாள் சூள் சண்டிகையேகன்னிசுத்தரிதுர்க்கை நாமம் 49 நீலியே, நெடிய காத்தி யாயனி, மேதிச் சென்னி மேலிடர் உறமி தித்த மெல்லியல், கெளரி. ஐயை மாலினுக் கிளைய நங்கை பகவதி, வாள்கைக் கொண்டாள், சூலி,சண் டிகையே கன்னி, சுந்தரி, துர்க்கை நாமம். பெயர்ப் பொருள் விளக்கம்: நீலி-கரு நிறத்தவள் காத்தியாயனி-கத்தியயவன் வழியில் வந்தவள் மேதிச்சென்னி-மகிடாசுரன் தலை ஐயை-தலைவி சண்டிகை-சினம் உடையவள சுந்தரி-அழகி 303