பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீரில் மூழ்கியிருந்த மலைப்பகுதி மெல்ல மெல்ல உயர்ந்து வெளித் தோன்றியது. இக்காலத்தும் மலைகள் பையப் பைய வளர்ந்து வரும் செய்தி களை அறிகின்றோம். இவ்வாறு தோன்றிய மலைப்பகுதியிலிருந்து நீர் வடிந்த நிலையில் அதில் தங்கிய நீர்மக் குழைவு, நீர்மச் செறிவுகள் முதலிய குறிக்க இயலாதவற்றிலிருந்து தோன்றிய ஊன்மம் என்னும் கூழிலிருந்து முதல் உடற்கூறு உருவாயிற்று என்று கொள்வதில் தவறும் இல்லை; பொருந் தாமையும் இல்லை. எவ்வகையில் நோக்கினாலும் மலையுச்சியே உயிரினத் தில் முதல் தோற்ற இடம் எனக் கணிக்கலாம். ஒளி, ஒலி பற்றிய துண்மைகள், உலகத் தோற்றம் என்னும் பலதுறை பற்றித் தெளிவு கொள்வதற்கு வழி வகுத்துள்ளவை அறிவியல் கணிப்புகளே. இக்கணிப்புகளைக் கண்டு வழங்கியதில் உலக அறிவியல் வல்லுநர்கள் வள் வல் களாக விளங்குகின்றனர். அவருள்ளும் மேலைநாட்டுப் பெருமக்களே மிகையா னோர். நம் நாட்டவருக்குச் சிற்றளவு பங்கே உண்டு. இவ்வகையில் ஒன்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறுகிறோம். அது நம் மண் கண்டிருக்கின்ற-கண்டு பதிந்திருக்கின்ற-பதிந்து நம் அறிவிற்கு அறிமுகப்படுத்தியிருக்கின்ற ஒன்று. ஆனால், நாம் நினைவிற் கொண்டு பொருத்திக்காணத் தவறியதுமாகும். அது எது? தொன்மையில் முந்தைய தமிழ்ப் பேரறிஞர்கள் வகுத்து வைத்துள்ள நூற்கருத்துக்கள். அவற்றை இலக்கிய, இலக்கணம் என்னும் அளவில்தான் எடுத்துக்கொள்கின்றோம். நிலவியல், அறிவியல் தொடர்பில் கணக்கில் கொள்வதில்லை. இப்பூவுலகம், தமிழ் முறையில் "நானிலம்” எனப்படுவது. அதாவது நான்கு வகை நிலம், அந்நான்கும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனப் பெற்றவை. (குறிஞ்சியும், முல்லையும் திரிந்த நிலத்தைப் பின்னர் பாலை நிலம் என்றனர்.) மலையும் மலை சார்ந்ததுமான குறிஞ்சி நிலம் இது வன்னிலம். காடும், காடு சார்ந்ததுமான முல்லை நிலம்; இது இடைநிலம், வயலும் வயல் சார்ந்ததுமான மருத நிலம்; இது மென்னிலம். நான்காவது கடலும் கடல் சார்ந்ததுமான நெய்தல் நிலம்; இது மணல் நிலம். இவ்வாறு அமைத்த வகைப்பாடு தமிழ்ப் படைப்பு. இந்நான்கின் முறை வரிசை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்பதே. இம்முறைவைப்பு இயற்கை 24 நல்லை முளியார்: பரி. 13-29 15