பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர்த் - செய்யுள்-66 நிலவு நிலவுசோமன்களங்கனிசாபதிபிறைகுளிர்ந்த கலையினனுடுவின்வேந்தன்கலாநிதியொடுகுபேரன் அலவனேசசியேதிங்களம்புலிநிசாகரன்வான் உலவிமகிரணன்சாந்தமுற்றதண்ணவன்குரங்கி sé நிலவு,சோ மன்,க ளங்கன், நிசாபதி பிறை,கு விர்ந்த கலையினன், உடுவின் வேந்தன், கலாநிதி யொடுகு பேரன், அலவனே சசியே திங்கள், அம்புலி. திசாக ரன்,வான் உலவிம கிரணன், சாந்தம் உற்றதண் ணவன்.கு சங்கி, பெயர்ப் பொருள் விளக்கம்: நிலவு-ஒளிகொண்டு நிலவுபவன் சோமன்-ஒளியைத் தோற்றுவிப்போன் களங்கன்-கருப்பு நிழலாம் களங்கம் உடையவன் நிசாபதி-இரவின் தலைவன் பிறை-இளந்திங்கள் - கலையினன்-ஒளி வளரும் கலைகளை உடையவன் உடுவின் வேந்தன்-மினுக்காது கோளுக்கும் விண்மீனுக்கும் இடைப்பட்டு வானத்தில் உள்ள உடுக்களின் தலைவன் கலாநிதி-கலைகளின் செல்வம் போன்றவன் குபேரன்-கரும்புள்ளிகளால் அருவெறுப்பானவன் அலவன்-இரவுப் பொழுதை உடையவன் சசி-முயல் உருவக் களங்கம் உடையவன் திங்கள்-ஒளி வளர்த்து தேய்பவன் அம்புலி-ஒளித்திங்கள் நிசாகரன்-இரவுப் பொழுதைக் காட்டுபவன் இமகிசணன்-பணிபோலும் குளிர்ந்த கதிர்களை உடையவன்