பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர்த் செய்யுள்-71 71. கதிர்மகன். மந்தன், காரி, கரியவன். செளரி, மேற்கோள், முதுமகன், பங்கு, நீலன், முடவன், நோய், முகன்,ச னிப்பேர் மதியுனும் இராகு நாமம் மற்றது தமம்,க றுப்பாம்; அதிகமாம் கேதுச் செம்மை, சிகி,கதிர்ப் பகையும் ஆமே. பெ. பொ. விளக்கம் : சனி-மெல்லச் செல்வோன் கதிர்மகன்-ஞாயிற்றின் மகன் மந்தன்-மெல்லச் செல்வோன் காரி-கருமை நிறத்தவன் செளரி-துரியன் மகன் மேல்கோள்-மேல் உள்ள கோள் பங்கு-முடமானவன் நீலன்-கருமை நிறத்தவன் முடவன்-முடக்காலன் நோய்முகன்-நோய் கொண்ட முகத்தை உடையவன் இராகு-நிலவை மறைத்து மீள்பவன் தமம்-வருந்தும் குணத்தவன் கறுப்பு-கரும்பாம்பு போன்றவன் கேது-தன்னை அறிவிக்கும் தன்மை உடையது செம்மை-சிவப்பு நிறத்தது - . சிகி-நெருப்பு நிறத்தது கதிர்ப்பகை-கதிரவன் பகை மதி உண்ணும்-திங்களை மறைக்கும்.