பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி. பி. முதல் நூற்றாண்டளவில் வாழ்ந்த பிளினி (Pliny) இதனைக் “குமாரி' முனை (Kumari Promontory) என்று குறித்தார். அடுத்து கி. பி. முதல் நூற்றாண்டளவில் எழுந்த பெரிபுளுசு (Periplus) என்னும் நூலின் ஆசிரியர் (பெயர் அறியக்கூடவில்லை) 'குமாரி” என்றார். கி. பி. இரண்டாம் நூற்றாண்டளவில் வாழ்ந்த தாலமி (Ptolony) குமாரியம் என்றார். இவர் குறிப்பு மிகச்சிறப்பானது. ஏன் எ னில் இவர் வரையறுக்கப்பெற்ற நிலவியல் (Geogaraphy) நூலைத்தந்தவர். கி. பி. 12ஆம் நூற்றாண்டளவில் வாழ்ந்த மார்க்கபோலோ (Marcopolo) குறிப்பிலும் "குமாரி” உள்ளது. இவை கொண்டு காலங்காலமாய் இக்கருத்து ஆயப்பெற்று உண்மையை வைரமாக்கி யுள்ளது. - - - - - * - இன்னோர் குமாரியம், குமாரி என்றமை குமரி முனையைக் குறிக்கும். குமரி நகரையுங் குறிக்கும். இன்னோர் எவரும் தமிழ் இலக்கியங்களைக் காணாதோர். 'குமரி என்னும் தமிழ்ச்சொல்லையே கையாண்டிருப்பது கொண்டு குமரிப்பகுதி உலகில் பரவலான அறிமுகங் கொண்டிருந்தமை புலனா கும். - - மேலை ஆய்வாளர் கருத்துக்கள் நம் இலக்கியக் கருத்துக்களுடன் இணைந்து, ஒத்து நிற்கின்றன. இவ்வாறு ஒருமுகம்ாகக் கொள்ளப்பெறும் குமரி மலை, குமரியாறு, பஃறுளியாறு என்னவாயின? s 4 பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள ' என்னும் வரலாற்று வரிகளை இளங்கோவடிகளா சிலப்பதிகாரத்தில் வழங்கி யுள்ளார். - -- ' வளைந்த கடல் குமுறிப் பொங்கிய கொந்தளிப்பால் இரண்டு ஆறுகளும், குமரி மலையும் மூழ்கின இக்கருத்துடன் இணையும் மேலை ஆய்வாளர் கருத்துக்கள் உண்மை நிகழ்ச்சியை உறுதிப்படுத்துகின்றன. . . . . . . கி. பி. முதல் நூற்றாண்டளவில் வாழ்ந்த பிளினி இக்கடல்கோள் பற்றிக் குறித்து குமரிநாடு மட்டுமன்றி இக்கடல் கோளால் தமிழகத்து மேற்குக் 26. வி. எசு. வி. இராகவன்: தாலமி-பக், 63 27 இளங்கோவடிகள்: சிலம்பு-11 அடி 19, 20 19