பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரையிலிருந்த முசிறியும், பாதலமும், கிழக்குக் கரை பிலிருந்த பூம்புகாரும் மூழ்கின என்றும் குறித்துள்ளார்.”* இலேமூரியா எனப்பெயரிட்ட அறிஞர் எக்கெல், 'பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே பெருநிலப்பரப்பாக விளக்க முற்றிருந்தென்று, அது பல கடல் கோள்களால் மறைந்து' என்றவர், மேலும் தொடர்ந்து ஒர் ஆழ்ந்த உண்மையை எமுதினார். இந்த இலெமூரியாவில்தான் முதல் மாந்தன் தோன்றினான்; ஊர்வன வாகிய உயிர்களும் இங்கேதான் தோன்றின -என்று பதிந்துள்ளார். இப் பதிவு உயிர்த் தோற்றத்தின் தாய் நிலம் எதுஎன்னும் பூட்டைத் திறக் கின்றது. - . அறிஞர் எக்கெலின் இப்பதிவு எவ்வாறு பொருந்தும்? எவ்வாறு நம் தமிழ்க் கருத்துடன் பொருந்தும்? சிலம்பில் பதியப்பெற்ற இரண்டு வரிகள் அந்தப் பொருத்தம் பொதியப் பெற்றவை. இப்பொதிவின்படி, - குமரிமலை பெரும் (கோடு) முகட்டைக் கொண்டது. குமரி என்னும் சொல்லின் மூலம் 'கும்’ என்பதற்கு ஏற்ப ‘கும் என்று அடி பெருத்து இடை பருத்து மேல் முகடான வடிவமைப்புள்ளது; - கும்மாந்த தோற்றத்தால் 'குமரிப் பெயர் சூட்டப்பெற்றது. 'பன் மலை அடுக்கம்" என்றதால் இம்மலை நீண்டு தொடர்ந்து பல மலைகளைக் கொண்டது; அடுக்கடுக்காகப் பக்க மலைகளைக் கொண்டது. 'குமி' என்னும் பகுதியால் L6ು குமி-குனி-குமிந்த-குவிந்த அமைப் பைக் கொண்டது. - -என்றெல்லாம் குமரி மலை பற்றிய விவரம்கொள்ள முடிகின்றது. இவ்விவரங்கள் யாவும் இம்மலை மிகத் தொன்மையான மலை என்பதற்கு உறுதி வாய்ந்த சான்றுகள். - 28 எக்கெல்: 3,5376 நூல் திராவிடத்தாய்-பிக். 6