பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-86. நாழிநாள் (பூரட்டாதி) முரசுநாள் (உத்தரட்டாதி) தோணிநாள் (இரேவதி) பொருவின்முற்கொழுங்கானாழிபுரட்டையேபூரட்டாதி முரசுபிற்கொழுங்கான்மன்னனுத்தரட்டாதிமுப்பேர் இரவிநாள்கலமேதோணியேற்றமாந்தொழுவேநாவாய் பெருகியகடை நாள் சூலம்பெருநர்ளெட்டிரேவதிப்பேர் 86. பொருவில்முற் கொழுங்கால் நாழி புரட்டையே பூரட் டிாதி முரசு, பிற் கொழுங்கால் மன்னன் உத்தரட் டாதி முப்பேர் இரவிநாள், கலமே தோணி ஏற்றமாம் தொழுவே நாவாய் பெருகிய கடைநாள், சூலம் பெருநாள் எட்டிரே வதிப்பேர் பெ. பொ. விளக்கம்: பூரட்டாதி-பழமையில் ஆறாவது மாதமாகிய புரட்டாதி (சி) முற்கொழுங்கால்-பூரட்டாதி விண்மீன் இரண்டும் உத்தரட்டாதி விண்மீன் இரண்டும் நீள் செவ்வகமாகத் தோற்றுவதைக் கட்டில் தோற்றமாகக்கொண்டு இது முன்னே தோன்றும் கொழுத்த கட்டில் கால் என்பர் - நாழி.--(நாழ்-குற்றம்) குற்றமுடையது புரட்டை -பூரட்டாதியின் மருஉ உத்தரட்டாதி-புரட்டாதிக்குரிய பருத்த விண்மீன்களின் தொகுதி' முரசு, மன்னன்-ஆண் பால் விண்மீன்களில் மன்னன் போன்றது பிற்கொழுங்கால்-பூரட்டாதிக்குக் கூறிய விளக்கப்படி பின்னே தோற்ற மளிக்கும் கொழுத்த கட்டிற்கால் இரேவதி-இரவி வதியும் நாள் இரவி நாள்-திங்களுக்குரிய நாள் கலம், தோணி, நாவாய்-சிறு கப்பல், படகு போன்றது 105