பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-93 ஒரு கலை மாதம் மதிதெரிகலை இரவு, மதிமறைகலைஇரவு திதியொடுபக்கந்தானேயொருகலைதெரிக்குமென்ப மதியொடுதிங்கள்சொல்லின்மாநமேபேதமில்லை மதிதெரிகலையிராப்பேர்வருஞ்சினிவாலியாகும் மதிமறைகலையிராவின்வரும்பெயர்குகுவென்றாமே 93 திதியொடு பக்கந் தானே ஒரு கலை தெரிக்கும் என்ப மதியொடு திங்கள் சொல்லின் மாதமே பேதம் இல்லை மதிதெரி கலைஇ ராப்பேர் வரும்சினி வாலி ஆகும் மதிமறை கலைஇ ராவின் வரும்பெயர் குகுனன் றாமே பெ. பொ. விளக்கம் ஒருகலை-திங்களின் 16 கலைகளில் ஒரு கூறுபாடு திதி-திங்கள் கலையின் ஓர் அமைப்புக் கூறுபாடு பக்கம்-திங்கள் கலையில் ஒரு பகுதி மாதம்- மதியின் முழு மறைவு-முழு நிலவு எல்லைக்காலம் கொண்டது மதி, திங்கள்-திங்கள் தோற்றம் மறைவுகளால் பெயர்கொண்ட கால அளவு மதிதெரிகலை இரா-திங்கள் தோற்றமளிக்கும் வளர்பிறை இரவு சினிவாலி-வளர்பிறைத் தோற்ற இரவு மதிமறைகலை இரா-திங்கள் பூமியின் நிழலால் மறையும் தேய்பிறை இரவு -: குகு-இருளால் மறைத்தல் உடையது 2#3.