பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்கண்ட (டெ)தெதிசு தோன்றிய காலத்தை உயிரியலார் இடை உயிரி (இடைப்பிராணி) உகம் என்று கணித்துள்ளனர். அஃதாவது உயிரின் படிமுறை வளர்ச்சியில் மத்தியதரைக்கடல் காலம் உயிரினத் தோற்றப்படியில் இடைக்காலம். இதுவரை கூறப்பெற்ற, குமரிக் கண்டமாம் இலெமூரியா-(காண்டுவானா) குமரியாறு, பஃறுளியாறு, குமரி மலை கடல்கோள், குமரி மூழ்கியது. இமம் தோன்றியது-முதலியவற்றை ' குமரி அம் பெருந்துறை” (புறம், 67-6) " தெனாஅது உருகெழு குமரி ' (புறம். 6-2) ' முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி " (புறம், 9-10, 11) & & 》多 மலிதிரை ஊர்ந்து தன் மண்கடல் வெளவலின் (கலி. 104-1) ' பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள ” (சிலம்பு. 11-20) ' தென்றிசைக் கண்ணதாகிய பஃறுளி யாற்றுடனே பலவாகிய பக்க மலைகளையுடைய குமரிக் கோட்டையும் (கடல்) கொண்டதனால் ” (சிலம்பு 1 -20 அடியார் உரை) " தமிழாராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரை ’ - (இறை. கள. உரை) என்றெல்லாம் தமிழ் நூல்கள் தருகின்றன. வடமொழி மறையில் அதர்வ வேதச் சதபாதப் பிரமானத்திலும் புராணங்களில் மச்சபுராணத்திலும் கடல் கோள் பற்றிய குறிப்புகள் உள்ளன என்பர். இவற்றைச் சான்றுகளாகக் காட்டினால், இவையெல்லாம் இலக்கிய இலக்கணம்; அவற்றின் உரைகள் தாமே; ஆராய்ச்சி முடிவாகுமா என்பார் உளர். - அன்னார். கருதி, மறுக்க இயலா ஆய்வு முடிவுகளில்-உலக அறிஞர்தம் ஆய்வு வெளிப் பாடுகளில்-சில* தர நேர்கின்றது. -

  • இவை பாவாணரின் ஒப்பியன் மொழிநூலில் தொகுத்துக் காட்டப்பெற்றவை.