பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர்த் செய்யுள்-100 இடி, மின்னல் வெடியொலிஅசனிசெல்லுவிண்ணேறுமட ங்கலாறே இடியின்பேருருமு.மற்றையனலேறுமிதன்பேரென்ப நெடுவித்துத்துத்தடித்துநீள்சம்பைசபலையோடு கடியசஞ்சலையேமின்னல்கனருசிமின் னினேழ்பேர் 100 வெடியொலி, அசனி, செல்லு விண்ணேறு, மட ங்கல் ஆறே. இடியின்பேர், உருமு மற்றை அனலேறும் இதன்பேர் என்ப நெடுவித்துத் துத்த டித்து நீள்சம்பை, சபலை யோடு கடியசஞ் சலையே மின்னல் கனருசி, மின்னின் ஏழ்பேர் பெ. பொ. விளக்கம் : இடி-இடிப்பது போன்று ஒலி முழங்குவது வெடி-வெடிக்கச்செய்யும் முழக்கம் உடையது ஒலி-ஒலித்தலை உடையது. அசனி-அழித்தலைச் செய்வது செல்-துன்பந்தருவது விண்ணேறு-வானத்தில் அரிமா போல் முழங்குவது மடங்கல்-இறுதி செய்வது உரும்-பேரொலி அனலேறு-நெருப்பின் வலிமை உடையது மின்-பளிச்சிட்டு ஒளிர்வது வித்தித்து-பேரொளி உடையது தடித்து-இருளைக் கண்டித்தல் உடையது சம்பை-மழையை அறிவிக்கும் முன்னோடியதாகி உழவர்க்குத் துயரில்லா மற் செய்வது - சபலை-மெல்லச் செல்வது சஞ்சலை-அசைவுடையது மின்னல்-பளிச்சிட்டு ஒளியைச் செய்வது கனருசி-மேகத்தின் கவர்ச்சி ஒளி