பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதன் சான்று: இம்மலை, காக்கசசு, ஆல்பசு, பிரணிகம் என்னும் மலை கள் (மையநில) கடலுக்குள்ளிருந்த காலத்தில் நான்கு கண்டங்களும் ஒரே வகையான நில உயிர்களும், செடி கொடிகளும் சல் படிவத்தில் காணப்படு கின்றன என்னும் உண்மையைச் சார்ந்தனவாகும் " Quardiffusi go. 44-roro aritori (Prof. J. Stanley Gardinar) இச்சான்றால் குமரிக்கோடு மூழ்கி இமமலை கடலுக்குள்ளிருந்து எழுந்ததன் நேர்ச்சியை உறுதிசெய்துகொள்ளலாம். மேலும், இச்சான்றால் ம்ற்றொரு கருத்தும் வெளிப்படுகின்றது, கடல் கோள் அழித்துத் தீமை செய்யும் என்பது மட்டுமன்று, புதிய மலைகளை உயர்த்தி நன்மையும் செய்யும் என்பதும் வெளிப்படுகின்றது. மையநிலக் கடல் தந்த இமமலை இந்தியாவை உலகத்தில் உயர்த்தி இருக்கிறது. இந்தியாவின் எல்லைக் கோட்டையைத் தந்துள்ளது, கங்கையாற்றைத் தந்துள்ளது. தமிழ் நூல்கள் அளவில் தென்கடலில் மூன்று கடல் கோள்களையே அறிகின்றோம். உலக நிலவியல் ஆய்வாளர்கள் ஐந்து பெரும் கடல் கோள் களை ஆய்வறிவால் அறிவித்துள்ளனர். ஓரளவான கால எல்லைகளையும் பின்வருமாறு அறிவித்துள்ளனர். நிலவியல் அறிஞர் கெட்டலியட்டு (Gettaliat) என்பார் இவ்வாறு கணித் துள்ளார்; ஆய்வு தரும் எல்லை அளவிற்கு மிகத் தொன்மையான கடல் கோள் பத்துநூறாயிரம் ஆண்டுகளுக்கு முன் நேர்ந்தது என்றும், அடுத்து அடுத்து எட்டுநூறாயிரம், இரண்டுநூறாயிரம், எண்பதினாயிரம், ஒன்பதினா யிரத்து ஐநூறு என நேர்ந்தன என்கிறார். இவையன்றி ஆங்காங்கு சிலவும் நேர்ந்ததுண்டு என்பதும் சிலர் கருத்து, மேலே கண்ட ஐந்து கடல்கோள் களில் நம் தென்மாகடலில் நேர்ந்த மூன்றும் அடங்கும். இதுகொண்டு நோக்கினாலும் இறுதிக் கடல்கோளில் மூழ்கிய குமரிமலை இதற்குமுன் பல கடல்கோள்களை மீறி நிலைத்துள்ளதை உணரலாம். எனவே, முதல் தோற்ற ம்லை குமரி ഥതയ அதில்தான் முதல் உயிரி முளைத்தது அதன் படிமுறை வளர்ச்சியால் மாந்தன் தோன்றினான் என முடிவுகொள்வதில் உறுதி பணிச்சிடுகின்றது.