பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த உறுதிவாய்ந்த முடிவோடு, படிமுறை வளர்ச்சிப்படி மாந்தன் உருவாகிப் பின்னர் உலகெங்கும் பரவியதால்தான் அவன் உறுப்புக்கள் அமைப்பாலும் எண்ணிக்கையாலும் ஒத்துள்ளன என்று முன்னர் நாம் கண்டு நிறுத்தியுள்ள கருத்திற்கு மீள்வோம். அமைப்பிலும் எண் ணிக்கையிலும் மட்டுமன்றி மாந்தனின் உறுப்புக்கள் இயக்கத்திலும் செயல்பாட்டிலும் பயன்பாட்டிலும் ஒருமுகங்கொண்டவை. இந் நிலவுலகை ஐம்பெரும் பூதங்களின் திரட்சியாகக்கண்ட தமிழன் மாந்த உடலையும் அவ்வைம்பெரும் பூதங்களின் கட்டாகக் கண்டான். அவ் வைத்தின் எண்ணிக்கையில் உடல் உறுப்புக்களையும் ஐந்தாகவே, இயல்பு முறைப்படி பகுத்துக் கண்டான். ஐந்து எண் இவ்வாறு தொடர்வதில் ஓர் இயைபு உள்ளது. இங்கு மாந்த உறுப்புக்கள் மொழித் தொடர்புக்காக எடுத்துக்கொள்ளப்பெறுகின்றன மொழியியல்பை மெய்ப்பொருள் உணர்வு டன் ஆராய்ந்த கிரேக்க அறிஞர் எ பிக்கூரசும் (Epicurus) அரிசுடோடிலும் (Aristotle) - ' மொழி ஐம்பெரும் பூதம் போல இயற்கையானது ' என்ற உண்மையைக் கூறியுள்ளதை இங்கு பொருத்திப் பார்க்கலாம். இந்த ஐந்து பகுப்பு இயற்கை மட்டுமன்று அறிவின் வகைப்பாடும் ஆகும். ' மெய், வாய், கண், மூக்கு, செவி ஐம்பொறியே ’ என்பது திவாகர நூற்பா. பிற நூல்களும் இவ்வாறே, . " பொறி வாயில் ஐந்து ' (திருக்குறள்-6) *" பொறியின்மை பார்க்கும் பழி அன்று " (திருக்குறள்-618)

  • " பொறியின் யாத்த புணர்ச்சி ' (தொல். பொருள். 111) என ஐந்தையும் பொறி என்றன. அசைவில், உந்தலில், துடிப்பில் இயங்கி செயற்பட்டு, பயன் விளைவிப்பது பொறி. மாந்த உறுப்புக்கள் ஐந்தும் இவ்வகையில் பொறிகள். ஒவ்வொரு பொறியும் தன்தன் இயக்கத்தில் ஒவ் வொரு அறிவைக் கொண்டது. அவ்வறிவு புலன் எனப்பெற்றது. ஐம்பொறி
  • இங்கு பொறி' என்பதற்கு உரையாசிரியன்மார் தெய்வம், ஊழ் எனப்பொருள்

கண்டமை பொருந்தாது. இயங்கும் உறுப்புகள் என்பதே பொருந்தும். 27