பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள் சொல்லப்பெறும் முறை வரிசை மேல் கண்டதுபோன்று மிகுதியாகவும் ஆங்காங்கு எடுத்துக்கொள்ளப்பெறும் கருத்திற்கும். ஆய்விற்கும். ஏற்ப மாற்றியும் கொள்ளப்பெறும். இங்கு எடுத்துக்கொண்ட மொழிப் பிறப்பிற்கு, 'மெய், வாய், முக்கு, செவி, கண்' என்று முறைப்படுத்திக்கொள்ளலாம். மெய்யை உடல், உடம்பு, யாக்கை என்றெல்லாம் கூறுகின்றோம். இஃது ஒரு தனி உறுப்பன்று. உறுப்புக்களின் என்றும் பிரியாத முறண்படாத கூட்டணி. ஐந்து உறுப்பைத் தாண்டிய ஆறாவது அறிவிற்கும் தனி ஆணி. அதே நேரத்தில் உள்ளுறுப்புக்களின் பாதுகாப்புப் பெட்டகம். இப்பெட்ட கம் மொழிக்கு மூலமான ஒலியை எழுப்புதற்கும், மொழித் தோற்றத்திற்கும் எவ்வாறு உதவுகின்றது என்பதைப் பின்னர் காண்போம். அடுத்த வாயின் மொழிப் பங்கு என்ன? முதல் மாந்த இனம். தனக்குப் புறத்திலிருந்து நேர்ந்த தாக்கங்களால் உணர்ச்சி உந்தப்பெற்று அவ்வுணர்ச்சியை வாயால் ஒலியாக, தன்னை அறியா மல் வெளிப்படுத்தியது. அச்ச உணர்வால் 'ஆ' என்றும், தாழ்வு உணர்வால் 'ஈ' என்றும், சுவை உணர்வால் 'ஊ' என்றும சின உணர்வால் 'ஏ' என்றும், அவல உணர்வால் 'ஒ' என்றும் தன் தன்மை வளர்ச்சியால் நேர்ந்த வியப்பு உணர்வாலும், நுண்மை உணர்வாலும் 'அய்'-'ஐ' என்றும், வஞ்ச உணர்வால் 'அவ்'-'ஒள' என்றும் ஒலிகள் உண்டாயின. இவை அனைத்தும் ஒலிகளே; மொழி அன்று. மொழி தன் உணர்வையோ கருத்தையோ மற்றவர்க்கு உணரவோ அறியவோ வைப்பது. மேற்கண்ட உணர்வு ஒலிகள் மாந்தனின் இயல்பு வெளிப்பாடுகள். அவனை அறியாமல் பிறந்தவை. மற்றவர்க்குத் தொட ர்பு ; இல்லாதவை. எனவே மொழி ஆகாது. ஆனால் பின்னர் முளைத்த மொழிக்கு முளைகள். இவ்வொலிகளை எழுப்பியது வாய் என்னும் உறுப்பு அன்றோ. ஆயினும் இந்நிலையில் வாய் மொழியைத் தருவது ஆகாது. எதனால் எனின் மாந்தன் தன் உண்ர்:ை கருத்.ை ம்ேற் கு உணர்த்த, அறிவிக்க.முதன்முதலில் * - - # $o ன்கையின் இயக்கம் என்பது அசைவால் நேரும்