பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. உணர்ச்சி ஒவி (மொழியின் முளை) இவ்வித்தாம் ஓசை அளவில் குரல் ஒலியாக எக்குறியும் இன்றித் தோன்றியது. இக்குறியற்ற ஒலியின் வளர்ச்சி மாந்தனுக்குப் புறத் தாக்கத் தால் ஒரு குறியாக முளைவிட்டது. இதனை முன்னர் (பக்கம் 3இல்) 'ஆ' 'ஈ' 'ஊ', 'ஏ', 'ஒ', 'ஐ', 'ஒள' எனக் கண்டோம். இவ்வொலிகள் மாந்தனின் உணர்ச்சி வெளிப்பாட்டின் முளைப்புகள். இவற்றை வியப்பொலி எனக் கண்டவர் மொழிஞாயிறு பாவாணர். இவை வியப்பை மட்டுமன் றிச் சுவை, அவலம், ஐயம், அச்சம் முதலிய உணர்வுகளின் வெளிப்பாடாகையால் 'உணர்ச்சி ஒலி எனலாம். இவ்வுணர்ச்சி ஒலியை மொழியின் முளை எனலாம். இம்முளையுடன் சேர்த்து எண்ணத்தக்கது மூக்கொலி. தொண்டைக் குழியில் முட்டி எழும் ஒலித்தாக்கம் வாய் திறக்கப்படாமல் முக்கு வழியாக ஒலியாகி வரும். (உம் கொட்டல், முக்கல், கனைத்தல், முனகல் ஒலிகள்) இவ் வெளிப்பாடும் உணர்ச்சி வெளிப்பாடே. இந்த உணர்ச்சி வெளிப்பாட்டில், உணர்ச்சி ஊற்று எவ்வாறு கரக்கிறது? இவ்வுணர்ச்சி ஒலியை ஏற்போன் ஏற்றுப் பெறும் உணர்ச்சிக்கு மூலம் எது? எவ்வகை உணர்ச்சிக்கும் கதிரவன் ஒளிக்கும் தொடர்பு உண்டு. இங்கு முன்னே (பக்கம் 7இல்) கண்டு பதிந்துள்ள முத்திரை 2, 3 கரணியங்க ளாகும. - - "ஞாயிற்றின் கரும்புள்ளித் தோற்றத்திற்கும் நம் நில உலகத்து உயிர்க ளுக்கும் தொடர்பு உண்டு' என்ற அடித்தளக் கருத்து சொல்லும் தொடர்பின் படி மாந்த உணர்ச்சி சுரப்பதற்குக் கதிரவனின் கரும்புள்ளி கரணியம்ாகிறது, அல்லது உதவுகிறது எனலாம், ஒலி ஏற்பு உணர்வும் இக்கரணியத்தால் அல்லது உதவியால் ஊறுகிறது எனலாம். . - ஒலியைத் தருவோனுக்கும் அதனை ஏற்போனுக்கும் அவனவன் தன் உணர்ச்சியில் மாற்றம் உண்டு. அம்மாற்றம் முத்திரை 3இல் பதிந்துள்ள, ' ஞாயிற்றின் கரும்புள்ளிகளால் உலக மாந்தனின் உணர்வுகள் மாற்றம் அடைகின்றன. ” என்பதன்படி இருவர்க்கிடையே மாற்றம் நேர்கின்றது எனலாம். எவ்வகையில் நோக்கினாலும் உணர்ச்சியின் ஊற்றுக்காலுக்கும் மாற்றத்திற்கும் கரணியம் ஞாயிற்றின் ஒளியே ஆகும். - 33

  1. ,-a-5