பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- இச்சுட்டொலிகளில் உலக முதன்மையான 'அ' என்னும் ஒலி எவ்வாறு பிறந்தது” தொண்டையிலிருந்து பிறந்த குரல் ஒலி. இணைந்து முடியிருந்த உதடும் இதழும் திறந்து பிளக்க, அங்காத்தலால் உண்டாயிற்று, இஃது இயல்பும் எளிமையும் கொண்ட முதல் ஒலி. இ' என்னும் ஒலி-குரலில் எழுந்த ஒலி, நாவின் நெகிழ்வால் உண்டாயிற்று. 'உ' என்னும் ஒலி தொண்டைக் குரல் ஒலி, உதடும் இதழும் குவிதலால் உண்டாயிற்று. இவ்வா றாக மூன்றையும் அடுத்தடுத்து ஒலித்து உணர்ந்தால் உணர்ச்சி ஒலிகளுக்கு அடுத்த நிலையில் இச்சுட்டொலிகளே இயல்பும் எளிமையும் கொண்டவை என உணரலாம். இத்துடன் உணர்ச்சியுடன் சற்று அறிவைத் துண்டும் அல்லது அசைக்கும் நிலைக்கும் மாந்தனைத் திருப்புகின்றன என்பதையும் உணரலாம். இவற்றால் சுட்டொலிகள் மொழி முளைப்பின் வேர் ஆயின. மொழி ஞாயிறு பாவாணர் இதனைத் தெள்ளிதின் ஆய்ந்து, ' குறிப்பொலிகளுடன் சுட்டொலிகளையும் கையாண்டு, அவற்றினின்று பல்லாயிரக்கணக்கான சொற்களைத் திரித்துக்கொண்ட காலம் 'சுட்டொ லிக் காலம் ஆகும். 'சுட்டொலிகள் தோன்றிய பின்னரே மொழி வளர்ச்சியடையத் தொடங்கிற்று. உண்மையில் சுட்டொலியடிச் சொற்றொகுதியே மொழி எனினும் இழுக்காகாது' என்று பதிந்துள்ளார். மொழியின் படிமுறை வளர்ச்சியில் இக்காலத்திற்குச் சுட்டொலிக் காலம்' என்று பெயரீடு செய்த திறன் உண்மை பொதிந்ததாகும். எனவே மொழித்தோற்றத்திற்கு விட்ட வேர் இச்சுட்டொலியம் வேரே. 4. போவி ஒலி (மொழியின் தண்டு) மொழியின் படிமுறை வளர்ச்சியில் அடுத்த படி போலி ஒலி. புறத்தே எழுந்த பிற உயிரினங்களின் குரல் ஒலிகளைக் கேட்ட மாந்தன் அவற்றைப் போன்று தானும் குரல் கொடுத்து ஒலித்துப் பார்த்தான். - 'கா' என்ற காக்கையின் குரல் ஒலியை, 'கூ என்ற குயிலின் குரல் ஒலியை 'மா' என்ற மாட்டின் குரல் ஒலியை, 'மே' என்ற ஆட்டின் குரல் ஒலியைப்போன்று குரல் கொடுத்தான். (பின்னர் இவ்வொலிகளே இவ்வுயிரினங்களுக்குப் பெயராக்கப்பெற்றன.) இவை, 36. ஞா. தேவநேயப்பாவாணர்: முதன்மொழி பக், 17 35