பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யெல்லாம் ஒரு குறிப்புப் பொருள் கொண்ட போலி ஒலிகள் இந்தப்படி நிலை o الإيمي ثنا i. * تنہا - - : மொழி முளைப்பில் தண்டு ஆகும். 5. அசை மொழி முளையும் வேரும் தண்டும் தளிரைத் தருமன்றோ? தந்தன. இது வரை பெரும்பகுதி தன்னை அறியாமலும், சிறிதளவு புறத்தே உளளவற்றை அறிந்தும் ஒலிகளை எழுப்பிய மாந்தன் அடுத்த படியாக, தனனை உணாநதவ னாக வாயின் பிற உறுப்புக்களைச் செயற்படுத்தத் தொடங்கினான். இஃதும் இயல்பில் நிகழ்ந்த படிநிலையாகும். சுட்டொலியின் முன்னர் நெகிழ்ந்த நாக்கு அசைந்து ஒலிக்கு உதவிற்று. இந்த அசைவு மேல்வாயாம் அண்ணத்தையும், பல்லையும் பொருந்தவைத்து ஒலிக்கூட்டலுக்கு வித்திட்டது. 'பைய நாவை அசைத்த பழந்தமிழ்” என்னும் பாடல் வரி எழக் கரணிய மானது. நாவின் அசைவுதான் மொழியின் பகு உறுப்பாம் அசையைத் தோற்றுவித்தது. யாப்பிலக்கணத்தில் செய்யுளுறுப்பிற்குச் சொல்லப்பெற்ற, 'அசைத்து இசை கோடலின் அசையே" என்னும் கருத்து இங்கு கானும் அசைக்கும் பொருந்தும். நாவையும், தாடையையும் அசைத்துச் சொல்லுக்கு இசைவாக அமைதலின் அசை எனப்பட்டது எனலாம். அசை என்பது பொருளற்ற எழுத்துக் கூட்டலுக்கும் குறிக்கப்பெற்றது பிற்காலத்தே. ஆனால், அசை என்பது தோற்றத்தில் பொருளுக்கு இயங்கிய இபக்கத்திற்குரியதே. மாடு அசை போடுகிறது என்கிறோம். அது என்ன செய்கிறது. மாடு தான் அரைகுறையாகத் தின்ற இரையை உரிய கூழ் ஆக்கு வதற்கு வாய்த் தாடையை அசைத்து இயக்குகிறது. தின்ன தீனி பயன்படு பொருளாகிறது. இதுபோன்றே நாவின் அசைவால் தோன்றிய அசை, மொழி எனப் பயன்தரும் இயக்கத்தின் விளைவே. எனவே அசையே பொருட் பயனுக்கு ஆவதால் இஃது 'அசைமொழி'. மொழிக்கு அசைவால் பிறந்த அசை எவ்வாறு இசைவாயிற்று? 37. மேற்கேள் நூல் யாப்ாபருங்கல விருத்தி எழுத்தோத்து -உர்ை-மேற்கோள்