பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர்க் செய்யுள்-145 மணிப்பவளச் சொற்கள்: வேதனை செய்வோன் காமுகர், நாகரிகர் சிற்றுார்க்காரன் படிறர்பல்லவர்பாத்தர்பகரிட ங்கழியரோடு விடருங்காமுகருந்துர்த்தர்மிக்கநாகரிகரென்ப கடிநகர்ப்பதிவாழ்கின்றசதுரர்காமுகரென்றும்பேர் அடைவுளகிராமமுற்றோன் கிராமியனாகுமன்றே 146 படிறர். பல்லவர், பரத்தர் பகர் இடங் கழிய ரோடு விடரும்கா முகரும் தூர்த்தர் மிக்கநா கரிகர் என்ப கடிநகர்ப் பதிவாழ் கின்ற சதுரர்கா முகர்ளன் றும்பேர் அடைவுள கிராமம் உற்றோன் கிராமியன் ஆகும் அன்றே: பெ. பொ. விளக்கம்: தூர்த்தர்-பிறர் மனைவியை வஞ்சித்துக் கவர்பவர் படிறர்-வஞ்சகமுடையவர் பல்லவர்-உறுதியில்லாதவர் பரத்தர்-பிறர் மனைவியைப் புணர்வோர் இடங்கழியர்-நல்லிடத்தினின்று கழிக்கப்படுபவர் விடர்-ஏமாற்றுபவர் . காமுகர்-காமவெறி உள்ளவர் நாகரிகர்-பாங்கான தன்மை உடையவர் சதுரர்-திறமை உள்ளவர் காமுகர்-பிறரால் விரும்பப்படுபவர். கிராமியன்-அளவறிந்து வாழும் சிற்றுாரினன்