பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டு-போலி ஒலி தளிர்-அசைமொழி மலர்-பலுக்கு மொழி மேலே கண்ட மொழி வரலாற்றின் முதல் மூன்று படிகளும் மாந்தன் தந்த மொழிக்கூறுகளின் படைப்புகள். அடுத்த மூன்று படிகளும் அவனது உணர்ச்சி தழுவிய முயற்சியின் படைப்புகள். இவை கொண்டு மொழி மாந்த இயற்கையில் பிறந்தது; மாந்த முயற்சியில் வளர்ந்தது என்பதைத் தெளிவாக அறியலாம். - எனவே, மொழி இயற்கைத் தோற்றம் என்று முடிவு கொள்வதுடன், 'மொழி ஐம்பெரும் பூதம் போல் இயற்கையானது' என்னும் அறிஞர் எப்பிகூரசு (Epicurus) கருத்துரை மீண்டும் நினைவிற்கொள்ளத்தக்கதா கின்றது. கிரேக்க மெய்ப்பொருள் நூலறிஞர் அரிசுடாட்டிலும் (Aristotle) இக்கருத்தையே கொண்டவர் என்பதும் மேற்கருத்தை வலுப்படுத்துகிறது. இதற்கு மாறாக, மொழி கடவுளால் படைக்கப்பட்டது என்னும் கருத்து உலகு எங்கும் உள்ள கடவுளியலாரால் எழுப்பப்பட்டது. இஃது அறிவை விலக்கிய நொய்ந்த கருத்து. ஈப்ரு மொழியைத்தான் கடவுள் முதலில் படைத்தார்' 'ஆதாமும் ஏவாலும் உரையாடுவதற்காககக் கடவுள் தந்த மொழி டச்சு எ னப்படும் எனவும், தொன்மை மொழியினரான கிரேக்கர், சீனர், எகிப்தியர், காண்டினேவியர் முதலானோர் கொண்ட மொழி கடவுள் படைப்பே' என்பதும் உலகில் இன்றும் பேசப்படுவது வியப்புக்குரியதா அறிவுத் தளர்ச்சியின் வெளிப்பாடா; காக்கை தன் குஞ்சைப் பொன் குஞ்சாக்கும் வாய் முயற்சியா என்றெல்ல்ாம் கருத வேண்டியுள்ளது. - இந்திய அளவிலும், 'சமஸ்கிருதம் தெய்வம் தந்ததால் தேவபாடை' 'புத்தர் வழங்கியது பாலி மொழி' 'சிவபெருமான் தன் தமருகத்தைத் தட்டியதில் ஒரு பக்கத்தின்ரின்று வட மொழியும் மறு பக்கத்திலிருந்து தமிழும் தோன்றின' என்றனர். - - - 39.