பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யது; வளர்த்தது. ஆயினும், இந்நிலையிலும் மொழி நிறைவுபெற்றதாக வில்லை. நிறைவிற்கு மற்றொரு தோற்றம் வேண்டப்பட்டது. அது மாந்த இனத்தின் இயற்கையால் முளைத்தது. சைகைமொழி காணப்படுவது. ஒலி மொழி கேட்கப்படுவது. இவை இரண்டும், இவை நிகழும் நேரத்தில்தான் பயன்படும்; பயன் தரும். நிலைத்தவை ஆகா. ஒன்று பார்வையிலிருந்து மறையும்; மற்றொன்ற காற்றுடன் கலக்கும். - வெளிப்படுத்தப்படும் கருத்து மேலும் ஒருமுறை, சிலமுறை, பலமுறை பயன்பட அது நிலைப்பாடு கொள்ளவேண்டும் இதற்குத் தோன்றியது வரி வடிவ எழுத்து. வரிவடிவ எழுத்துத்தான் மொழிக்கு நிறைவைத் தந்தது. இவ்வரி வடிவத்தை ஈன்றதும் கையே. பல்கிப் பரந்த மாந்த இனம் ஆங்காங்கு இவ்வரிவடிவத்தைப் பல்வேறு வடிவங்களில் கண்டது. பலுக்குமொழிக் காலத்தில் பரவத் தொடங்கி, ஆங்காங்கு மாந்தர் வாழ்வுபெற்ற பின்னரே வரிவடிவ எழுத்து தோற்றம் பெற்றது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளுள் சொற்கள் ஓரளவிலும் சிலவற்றில் பெருமள விலும் ஒத்திருப்பினும் எழுத்துக்கள் ஒத்திருப்பனவல்ல; வேறுபாடு கொண்டனவாகக் காணப்படுகின்றன. இது பலுக்கு மொழிக்குப் பிறகுதான் வடிவ எழுத்து தோற்றம் பெற்றதைக் காட்டுகிறது. வரிவடிவம் சைகை மொழியுடன் இணைந்ததாகவும் கொள்ளப்பெற்றது. சைகையால் ஏதேனும் ஒரு பொருளைக் கருவியாகக்கொண்டு உருவம் தரப் பட்டது. சீன திபேத்தியர் அக்காலத்தில் கயிற்றில் முடிச்சு போடுவதைக் கருத்தறிவிப்பாகக் கொண்டனர். முடிச்சும் கருத்தை எழுப்பியதால் எழுத்தாகக் கொள்ளப்பட்டது. அதனை 'முடிச்செழுத்து’ (Knot Writing)" என்றனர். சைகை மொழிக்குக் கை அசைந்தது. 41. .... * * * * = - - - - கலைக்களஞ்சியம் 2 பக். 576 43