பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/582

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி மக்கட் பெயர்த் செய்யுள்- 180 வாழ்க்கைத் துணை இல்லவளுரிமைபன்னிகுடும்பினியில்லேயில்லாள் வல்லவைகளமேதாரமனை பாட்டிமனைவிருந்தம் சொல்லியபாரிவாழ்க்கைத்துணைகளத்திரமேகாந்தை நல்லகாதலிவிரும்புநாயகிதேவிநாமம் 180 இல்லவள், உரிமை, பன்னி குடும்பினி, இல்லே இல்லாள் வல்லவை, களமே தாரம் மனையாட்டி, மனைவி ருந்தம் சொல்லிய பாரி, வாழ்க்கைத் துணைகளத் திரமே காந்தை நல்லகா தலி.வி ரும்பும் நாயகி தேவி நாமம் பெ. பொ. விளக்கம் : தேவி-இன் பத்திற்கு உரியவள் இல்லவள்-இல்லத்திற்கு உரிபவள் உரிமை-குடும்ப உரிமை உடையவள் பன்னி-கணவனை உடையவள் குடும்பினி-குடும்பத்தை உடையவள் இல்- இல்லத்திற்கு உரியவள் இல்லாள்-இல்லத்தை ஆள்பவள் வல்லவை-குடும்பத்திற்குரிய வல்லமை உடையவள் களம்-தாலி அணிந்த கழுத்தினள் - . தாரம்-கணவனை அணிகலனாகத் தரிப்பவள் மனையாட்டி-மனையை ஆளும் பெண் மனை-மனைக்குரியவள் விருந்தம்-புதுமையான இன்பமுடையவள் பாரி-குடும்பத்தைத் தாங்குபவள் • * வாழ்க்கைத்துணை-வாழ்விற்குத் துணை நிற்பவள் களத்திரம்-கழுத்தில் தாலியணிந்த உரிமையள் காந்தை-கவர்ச்சி உடையவள் 432,