பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/585

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி - சூடாமணி செய்யுள்-181 முந்திய பெருமான், பிள்ளை முளை,சுதன், புதல்வன், புத்திரன் மைந்தன்,கால், பொருள்,சேய், எச்சம் வழியிறங் கடைமகன் பேர். பெ. பொ. விளக்கம் : மகன் -இளமை உடையவன் சந்ததி-குலத்தை வளர்ப்பவன் மதலை-குடும்பமதர்ப்பளிப்பவன் சூனு-பிறப்பிக்கப்பெற்றவன் தனயன்-தந்தைக்கடுத்தவன் மெய்யன்-உடல் தொடர்பால் பிறந்தவன் நந்தனன்-பெற்றோரை மகிழ்விப்பவன் தோன்றல்-குடும்பப் பெருமைக்குத் தோன்றியவன் குட்டன்-சிறியவன் . செம்மல்-குடும்பச் செம்மையைக் காப்பவன் . மருமான்-பெற்றோர் தழுவுதற்குரிய அருமையானவன் பிள்ளை-உயிரின இளமைக் குறியானவன் முளை-குடும்பப் பயனுக்கு முளைத்த தோன்றல் சுதன்-பிறப்பிக்கப் பெற்றவன் புதல்வன்.-(புதல்வு-தோன்றுதல்) தோன்றிய ஆண் மகன் புத்திரன்-'புத் என்னும் நரகில் தள்ளாமல் காப்பவன் மைந்தன்-வலிமையுடையவன் கால்-குடும்பத்திற்கு ஊன்றுகால் போன்றவன் பொருள்-குடும்பச் செல்வம் சேய்-செம்மை உடையவன் எச்சம்-பெற்றோர்க்குப்பின் எஞ்சி நிற்பவன் வழி-குடிபெருக வழியாக இருப்பவன் பிறங்கடை-(பிறங்கு-கடை) குடி விளங்குதற்குப் பிறந்தவன் ஒப்பீடு சூடாமணி-181 பிங்கலம்-920 கயாதரம்-121 நாமதீபம்-195 மகன் 1-24 19 மகன் 21 மகன் 21 சந்ததி சந்ததி சந்ததி சந்ததி 435