பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளியிட்ட ஒலியின் தாக்கத்தால் ஒலியெழுத்து உருவாவதை ஒலி அறிவியலார் பின்வருமாறு கண்டுள்ளனர்: - ஒவி ஒர் அதிர்ச்சித்தொடர், அந்த அதிர்ச்சியை நெகிழ்ந்து கொடுக்கும் மெல்லிய மணலிலோ பிற பொருளி லோ செலுத் தினால் அது வெவ்வேறு உருவு டைய காற்றலைகள் வாயிலாகத் தாக்கியபோது வெவ்வேறு வரிவடிவங்கள் அடைவதைக் கண்டறிந்தனர். இஃது இயற்கை ஒலியெழுத்து. இதன் இயற்கைப் போக்கில் மாந்தன் முன் கண்ட கோடிடல், கீறல், வரைதல், எழுது தல் முதலிய செயல்களின் வளர்ச்சியால் ஒலிக்கேற்ற வரிவடிவத்தைப் படைத் தான. இப்படைப்பு காட்சிப்படுவது. அஃதாவது ஒளியால் காட்சிப்படுவது. காட்சியை ஏற்படுத்துவது ஒளி என்று காண்போம். மேற்கண்ட ஆய்வின் முடிவுப்படி வாய் ஒலியின் தாக்கம், வரிவடிவக் காட்சியாம் ஒளியைத் தந்தது. இங்கு ஒலி, ஒளியைப் பிறப்பிப்பதாகிறது. தோற்றத்தில் ஒளி ஒலிக்குத் தாய். வரிவடிவ எழுத்தாகிய ஒலியெழுத்துப் படைப்பினால் ஒளிக்கு ஒலி தாய் ஆகிறது. இதனைச் செய்தவன் மாந்தன். இதைத்தான் முன்னர் (பக்கம் 7) "மாந்தன் ஒளி, ஒலி பற்றிய அடிப் படைத் தொடர்பிலிருந்து ஒரு மாற்றம் செய்துள்ளான்' என்று எழுதி அதற்கு, "அது என்ன மாற்றம்?' என்ற வினாவும் எழுப்பப்பெற்றது. இவ்வினாவின் விடை தான் மேலே கண்ட வழியில் ஒளித்தாய் சேபாகி ஒலி தாய் ஆனமை. ஆம்; ஒலியின் அறிகுறியாக ஒளிப்படும் வரிவடிவனழுத்தை உருவாக்கிய மாற்றம். இவ்வகையாக, எழுதப்படும் வரிவடிவ எழுத்து பிறந்தது. இவ்வெழுத்து வழி சொற்கள் தோன்றி வரி வடிவ மொழி உருப் பெற்றது. வரிவடிவ உருவப்பாடுதான்-எழுத்து மொழிதான் மொழியை நிறைவுடை தாக்கியது. - - இப்பகுதியை படித்து வருவோர் அறிவில் ஒரு வினா எழுதல் இயல்பே. 'பொதுவில் 'ஒலியில் மொழி” என்று தொடங்கிய இந்த ஆய்வில் பெரும்பகுதி தமிழ் வழியே சான்றுகள் தருகின்றமை எவ்வாறு பொருந்தும்? என்பது அவ்வினா. - - 'முதல் மாந்த இனத் தோற்றம் குமரிக்கோடு என்னும் முடிவின் தொடர் பில் மாந்த இனம் பேச்சு மொழியைக் கண்டது என்னும்போது அது அவ்வினத் தின் மொழியாகத்தான் இருக்கும்’ என்பதே விடை. 45