பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவ்வாறாயின் அம்மொழி தமிழ்தான் என்பதற்குச் சான்று என்ன 尊 என்னும் தொடர்வினா எழுவதும் இயல்பே. இந்தத் தொடர் வினாவிற்கு இந்த "ஒலியில் மொழி'யைத் தொடரும் மொழியில் தமிழ் விடை தரும். 3. மொழியில் தமிழ் பலுக்கு மொழியை அடித்தளமாகக்கொண்டு உலகில் மொழிகள் பல்கின என்று கண்டோம். அவ்வாறு பல்கிய மொழிகள் எத்தனை? மொழியறிஞர் தந்துவரும் உலக மொழிக் கணக்கு நம்மை ஒரு நிலைக்கு அழைத்துச் செல்ல வில்லை. செர்மனி நாட்டு மொழியறிஞர் மாக்கமுல்லர் (Max Muller 18231900) 900 மொழிகளுக்குக் குறைவில்லை என்றார். மொழியறிஞர் ஈ. கீக்கர்சு (E, Kieekars 1931) மறைந்த மொழிகளைவும் சேர்த்து 176 என்றார். மொழிநிலப் படத்தை வரைந்த பல்பி (Balbi) 600 என்றார். பிரெஞ்சுக் கழகம் (French Academy) 2796 என்று கணக்கிட்டுள்ளது. எச். கிரே gruša (H. Grey Luis) orgp5u (Foundation of Language) grow 2500 முதல் 3000 வரை காட்டுகிறது. மேலும் இவ்வெண்ணிக்கை 4000, 6000 என்றெல்லாம் சொல்லப்படுகிறது. மேலைநாட்டு மொழியறிஞர் பேச்சு வழக்கை வைத்தே மொழிகளைக் கணக்கிடுகின்றனர். இதனால் ஒரு மொழியே அந்நாட்டின் பல பகுதிகளில் வேறுபடும் திரிபுகளால் பல மொழிகளாகக் கணக்காகிறது. சான்றாகத் தமிழைத் திருநெல்வேலித் தமிழ், இராமனாத புரத்துத் தமிழ், சென்னைத் தமிழ், தஞ்சைத் தமிழ், யாழ்ப்பாணத் தமிழ் என்றெல்லாம் தனித்தனி மொழியாகக் கொள்ளப்படுவதைக் கூறலாம். இவ் வகையில் இந்திய நாட்டு மொழிகளே 1652 என்பது ஒரு கணக்கு. சியார்சு &sorujirofit George Grierson—Linguistic Survey of India) Goiáð 225. 1000 மக்கள் பேகம் மொழி எனக்கணக்கிட்டு 700 மொழிகள் என்றும் 5000 மக்கள் பேசும் மொழி எனக்கணக்கிட்டு 259 என்றும் இந்திய மொழிக் கணக்கு பல்வகைப்படுகிறது. . ... - இவ்வாறு பல மொழிகள் கொண்ட மொழி உலகில், தமிழ் மொழியின் நிலை என்ன? மொழியறிஞர் தமிழை எவ்வாறு எப்படிநோட்டிமிடங்.ெ