பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எந்நெறியில் ஆராயப்பெற்றது? எந்தத் தகுதியில் வைக்கப்பெற்றுள்ளது? உண்மை வெளிம்படுத்தம் பெற்றதா? இவ்வினாக்களுக்கு கிடைக்கும் விடைகள், முன்னே "ஒலியில் மொழிப் பகுதி யின் இறுதியில் எழுப்பி நிறுத்தப்பட்டுள்ள வினாவிற்கும் விடையாகும். உலக மொழிகளை வகைப்படுத்த முயன்றோர் 3 தலைக்குடிகளாக்கினர். இவ்வகைப்பாடு அறிஞர் டபிள்யூ. சிமித் (W. Smith) என்பவர் வகுத்த கருத் தின் வழி எழுந்தது. அத்தலைக்குடிகள் 1. listulo (Aryan) 2. Golfurü (Semitic) 3. AEßwsoñil No (Turaniam) எனப்படும். மொழியறிஞர் பலரும் இதனை ஏற்றனர். ஒவ்வொரு தலைக் குடியிலும் பல குடும்பங்களை வகுத்தனர். அவ்வகையில் உலகில் மொழிக் குடும்பங்கள் 27 என்று பிரெஞ்சுக் கழகமும் (French Academy), 30 முதல் 40 வரை என்று மொழியியல் அறிஞர்களும் வேறுபட்ட எண்ணிக்கையில் வகுத்துள்ளனர். - தலைக்குடிகள் மூன்றில் தமிழ் ஒரு தலைக்குடியாகக் கொள்ளப்பெற வில்லை, தமிழைத் தனியாகவன்றித் 'திராவிடம் என்னும் பெயரில் துரேனியத் தலைக்குடியில் வைத்துத் 'திராவிடக் குடும்பம் என்றனர். இதனை மொழியியலார் மிகப்பலரும் ஏற்றுள்ளனர். தமிழின் தனித்தன்மை கூறும் அறிஞர் கால்டுவெல்லும் ஏற்றுள்ளார். தமிழ் உணர்வாளராகிய நம் தமிழ்ப் பரிதிமாற்கலைஞரும் ஏற்றுள்ளார். மற்றொரு சாரார் அக்கேடிய மொழியின் வழிமொழியான பினிசியத்தைச் சேர்ந்தது என்றொரு கருத்தையும் தந்துள்ளனர். - உலகில் ஐரோப்பாவும் ஆசியாவும் கூடிய யூரேசிய மொழிகளை 1. பழைய ஆசிய மொழிகள் 2. சீன திபேத்திய மொழிகள் 3. அந்தமான் மொழி - 4. திராவிட மொழிகள் 47