பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பத்தைச் சேர்ந்தது' என்றார். அண்மைக்கால ஆய்வாளர்கள் தமிழை அறிந்தவராயினும், அதன் அடித்தளங்கள் காணாதவர்கள். - இத்தகைய ஆய்வாளர்கள் தமிழைத் திராவிடத் தொகுப்பில்-அப்பெய ரில் வைத்ததை நோக்கவேண்டும். தமிழைத் திராவிடம் என்று சொல்வதே ஒரு திரிபு நிலையின்பாற் பட்டது. தமிழ் என்பதே திராவிடம் ஆகியது. திராவிடத்திலிருந்து தமிழ் வரவில்லை. ஆனால், திராவிடம் என்றே பலர் கொண்டனர்; காட்டினர். தமிழைத் திராவிடம் என்றவர் எவர்? சமற்கிருத வடமொழியாளரே. ஆயினும் மேலை ஆய்வாளர்களிற் சிலரும், அண்மைக்கால, தமிழ் ஆழமறிந்த மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரும் அத்தகவினரும் 'தமிழ்தான் திராவிடம் எனப்பட்டது' என்றனர். வடமொழியாளரே திராவிடம் என்றவர். எனவே, அவரது மொழிச் செயல் கொண்டே இதனை விளக்கவேண்டும். 'தமிழ்’ என்பதில் 'ழ்' வடமொழியாளரால் பலுக்க இயலவில்லை. எனவே, அதனை விடுத்து, 'தமி' என்பதைத் 'த்ரமி' என்றனர். இவ்வாறு பலுக்குவது சமற்கிருத மொழியின் இயல்பு நிலை. இதற்குச் சான்றாக ஒன்றிரண்டு காட்டவேண்டி நேர்கின்றது. பவ்வம் - கடல். கடல் வளம் - பஷ்வவளம் - பவ்வளம் பவளம். (இதைப் பவழம் என்றும் குறித்தனர்). இது தமிழ், வடமொழி ஆரியர் தொன்மையில் கடலைக் காணாதவர்; பவளம் அறியாதவர். அவர்க்குப் புதிதான பவளம் என்னும் சொல்லில் 'பவ'-வை, 'ப்ரவ' என்று பலுக்கி, ப்ரவளம்-ப்ரவாளம் என்றனர். படி'- ப்ரதியாயிற்று. "படிமம்-ப்ரதிமா ஆயிற்று. இவை போன்று, கார்-கருமை. அது ஆகுபெயராக கருத்த முகிலுக்கு ஆயிற்று. சீர்-சீர்த்தி ஆவது போன்று, கார்-கார்த்தி ஆக, கை விகுதி பெற்றுக் கார்த்திகை என்றாயிற்று. இது தமிழ் வடமொழியாளர் 'கார்' என்பதைக் க்ரு' என்று பலுக்கி க்ருத்திகை-க்ருத்திகா என்றனர். 49.