பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ழகரம் பலுக்க வராமையால் ஒரளவில் பலுக்க வரும் ளகரத்தைத் கொண்டு தமிழ்-த்ரமிள் என்று தொடர்ந்து தமிளம்-த்ரிமிளம்-த்ரமிடம்- த்ரவிடம்-த்ராவிடம் என்றனர், இங்கு முனைவர் சி. எர்னெஃச்டு tạg bų (C. Ernest Trump GT Görgyib அறிஞர் குறித்த ளகர ஒலி உள்ள வடசொற்கள் திராவிடச் சொற்களே என்றதையும் இணைத்து நோக்கவேண்டும். மற்றும் ழகர, ளகரங்கள் வட் மொழியில் டகரமாவதை வடமொழியின் மிகு உறவு கொண்டுள்ள தெலுங்கில் 'ஏழு-ஏடு என்றும் 'இழு-இடு' என்றும் இவைபோன்று பலவும் வருவன கொண்டும் அறியலாம். இவ்வாறு அவர் தம் பலுக்கலால் உருவாக்கப்பட்ட திராவிடம் அதாவது இத்திரிபு வழக்கு அவர்களாலேயே முதன்முதலாகவும் அதிகமாகவும் கையாளப் பெற்றது. இதற்குச் சில சான்றுகள்: வராகமிகிரருடைய பிருகத் சம்மிதையில் "த்ராவிடர் உள்ளது. வால்மீகி இராமாயணத்தில் வால்மீகியால் இச்சொல் குறிக்கப்பெற்றது. மகாபாரதத்தில் சத்திரியர் 'திராவிடர் எனப்பெற்றனர். பாகவதம் காந்தத்தில் சத்தியவிரதன் என்பன் 'திராவிட' எனப் பெற்றான். - மச்சபுராணத்தில் ஒரு தமிழ் மன்னன் பெயர் த்ரமிளேசுவரன் குமாரிலபட்டர் 'ஆந்திர த்ராவிட பாஷைகள் என்று தமிழைத் 'திராவிடம்' என்றார். இவர் மேலும் ஒரு படி போய் 'கன்னடம் தமிழ் இரண் டிற்கும் தாய்மொழி திராவிடம் என்றார். எனவே திராவிடம் தமிழின் திரிபுச் சொல். தமிழே மூலம். மொழிஞாயிறு பாவாணர் பதிந்துள்ளதும் இக்கருத்தே.

  1. (Dr. Grierson