பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'திரிபே திராவிட மாம்' என்று மொழிஞாயிறு பாவாணர் பாடி யுள்ளமை உண்மையின் பதிவாகும். திராவிட மொழிக் குடும்பம் என்று மொழியியலார் கொண்டுள்ளது தமிழ் மொழித் தொடக்கமாகப் பின்வரும் மொழிகள் உள்ளன. தமிழ் - தமிழ் நாட்டு மொழி மலைஞாலம் - கேரள மாநில மொழி கன்னடம் - கருநாட்டக மொழி துளு – தென் கன்னடத்திலுள்ள துளு நாட்டு மொழி குடகம் - தமிழகத்தின் மேலைப்பகுதி மொழி கொடுந் தமிழ் தேர்தவம் - நீலகிரி மலைவாழ் பழங்குடியினர் மொழி கோண்டு - மத்திய மாநிலக் கோண்டுவானா பகுதி மொழி மாலர் – பவளத்தீவு வாழ் மக்கள் மொழி பிராகூயி - பலுசித்தான் வாழ் பழங்குடியினர் மொழி கூயி - - கோண்டு போன்றது பார்ச்சி (Parji) - சப்தப்பூர் மொழி (காய் என்றும் பெயர்) குருக்கு - மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மக்கள் மொழி மற்றும் கவர், உராவன் என்பன. - அறிஞர் கே. எம். சியார்சு (K. M. George) இந்திய மொழிகள் 250 என்று கொண்டு (5000 மக்கள் பேசும் மொழிகளாகக் கொண்ட கணக்கு) அவற்றைப் பின்வருமாறு பிரித்துக் காட்டியுள்ளார்: இந்தோ ஆரிய மொழி 124 திராவிட மொழி 3G சீன திபேத்திய மொழி 73 அஃச்டிரிக் மொழி 33 வகைப்படுத்