பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க இலக்கியங்களாம் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் தமிழ் வளத்தின் பெட்டகங்கள். சில சொற்களன்றிப் பிற வடமொழி, பிறமொழிச் சொற்கள் கலவாதவை. தனக்கென ஒரு தனித்தகவு கொண்டவை. ஒரு மொழியின், அதிலும் இயற்கைத் தோற்றங் கொண்ட மொழிக்குரிய அடித்தள மான சொற்களின் கருவூலம். தொன்மைச் சொற்களின் சுவடுகள் கொண்டவை. இத்தகைய செறிவான மொழித்துறைக்குப் பயன்படும் சங்க நூல்களை அறியா மல், கற்காமல் செய்யப்பெற்றும் உலக மொழி ஆய்வு எவ்வாறு நிறைவு கொண்டதாகும்? இதனையும் மீறி அணுகுவது ஒரு முளி அணுகல். ஒரு மூளி அணுகல் உலக மூல மொழியைக் காணத் தகுதியற்ற உடைசல், இதனால்தான் நல்ல மொழி நுணுக்க அறிவு கொண்ட அறிஞர்களாலும் உலக முதன் மொழி காணப்படாமலும், அறுதியிடப்பெறாமலும் அரைகுறை யாகவே போயிற்று. - ஆயினும், அன்னோர் அறிவில் கண்டு வெளியிடப்பெற்றுள்ள கருத்துக் கள் நம்மை உலக முதன்மொழி வளாகத்திற்குள் அழைத்துச் செல்கின்றன. அக்கருத்துக்களைப் படிப்படியாகக் கண்டு அப்படிகளில் ஏறினால் நாம் குமரிக் கோட்டை அணுகலாம். அதன்மேலும் சங்க இலக்கியச் சொற்களை- அவற் றின் மூலங்களைக் கொண்டு ஆய்ந்தால் உலக முதன்மொழியை அறிய முடியும். மொழி ஆய்வின் தொடக்க காலம் முதல் வெளியிடப்பெற்றுள்ள ஆய்வுக் கருத்துக்களை ஆங்கிலப் பேராசிரியர் சி. துரைசாமி என்பார் தொகுத்துப் பார்த்துத் தந்துள்ளவற்றைக் காண்பது இங்கு பொருத்தமாகும். அதனால் பெறப்படும் கருத்துக்கள் உலக மூல மொழிக்குச் செல்லாது போனாலும், மூல மொழியைப் பற்றுவதற்கான ஒரு கைகாட்டிக்கோட் ைபற்றுக்கோட்டைக் கொள்ளமுடியும். இப்பற்றுக்கோட்டை 'ஆதார மொழி' என்று குறிப்பிட்டுள் ளார். இந்தப் பற்றுக் கோடாம் ஆதார மொழி என்று குறிப்பதும் ஏதேனும் ஓர் அடையாளமோ, சுவடோ பதிந்ததாகக் காட்டப்பெறவில்லை. 'ஏதோ ஒரு மொழி ஆதார மொழியாக இருக்க வேண்டும். ஒர் ஆதார மொழியை அணுகியதாக இருக்கலாம்; ஒர் ஆதார மொழியின் வழிமொழியாக இருக்கலாம்; ஒரு குடும்ப ஆதார மொழியின் ஒட்டுறவாக இருக்கும்’ எனத்தான் மொழியியல் அறிஞர் பலராலும் காட்டப்பெற்றுள்ளது.

47. எம். எசு. துரைசாமி: கலைக்களஞ்சியம் தொகுதி 8 பக்கம் 548, 5.49 55