பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பாசிரியர் உரை - مسحهمتسoة يميجيون يمسسمه-- " பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல் * * - - - - 4 * - 39 பழமை கழிந்து புதுமை புகுவது இயற்கை அவ் -வியற்கை இதன் உட்கருத்தாக உள்ளது. ஆனால் நூற்பா முடியவில்லை. புள்ளி வைக்கப்பட்ட இடத்தில் கால வகையினானே என்பது உரியதாகும். இத்தொடரில் மற். -றொரு ஆழமானக் கருத்தும் உள்ளது பழமை கழிந்து புதுமை புகுவது காலத்துக்குக் காலம் மாறுபடும்; வேறு படும். இயல்பாக இருத்தலும் உண்டு. தமிழில் புதிய கருத்துகளை அவ்வக்காலத்துப் புலவர்கள் அவ்வக்காலச் சூழலுக்கேற்பவும் அவ்வக்கால மொழி நிலைக்கேற்பவும் புதியன கூறுவர். இத்தகைய கூற்றுகளால் புதுவகையான நூல்களே தோன்றுவதுண்டு. அதற்கு இக்கால அறிவியல் நூல்களைக் கூறலாம். பழையனவற்றுள் எல்லாம் கழிந்துவிடக் கூடாது. சிறந்தவை ്താക്ക வேணடும், தொடர வேண்டும். அவ்வாறு நிலைத்தவற்றையும் புகுந்தவற்றையும் மேலும் நிலைக்க அவற்றைப் பதிவாக்க வேண்டும். அப்பதிவுதான் நூற்பதிப்பு எனப்படுகின்றது. இச் சூடாமணிப் பதிப்பும் பழையன கழியாமல் புதியன விளக்க உரைகளாகச் சேர்ந்து அமைந்ததாகும். ஆராய்வுரையில் கூறப்பட்டிருப்பது போல இச் சூடாமணிப் பதிப்பு பத்துவகை விளக்கங்களைக் கொண்டு உள்ளது. இப்பதிப்புக்கு முயன்று செய்ததால் ஏற்பட்ட உவப்பைவிட விளக்கவுரைகள் எழுதியதால் ஏற்பட்ட மகிழ்ச்சி நிறைவானது; சிறந்தது ஆகும்.