பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வாறெல்லாம் தொகுத்துக் காட்டுகின்ற ஆங்கிலப் பேராசிரியர் முதன்மொழி ஆய்வாளர்தம் கருத்துக்களைக் கொண்டு, முதலில் வந்த மொழி ஆராய்ச்சியாளர்கள் வடமொழிதான் ஆதார மொழி என்று சொல்லாவிட்டாலும், ஆதார மொழியி னின்று முதன் முதலில் கிளைத்த மொழியாக இருக்கவேண்டும்” என்று முடித்தார். இம்முடிவு தொன்மைச் சமற்கிருதத்தை மொழியிலிருந்து ஒதுக்கி அதற்குத் தாய் நிலை இன்றி மூத்த மகள் பிறப்பைத் தந்துள்ளார். இந்த ஆதார மொழிக் கருத்துக்களே உலக முதன் மொழியை அனுகும் கருத்துக்கள். இந்த அணுகலை ஈர்த்திடும் மொழி எது? அது கண்டறியப் பெற்றால் உலக முதன் மொழியை உறுதி செய்யலாம். அறிவியல், பொறியியல், நிலவியல், வானவியல் முதலிய பல இயல்களை விளக்கும்போதும், ஆராயும் போதும் சான்றுகளாக மேலை நாட்டு ஆய்வாளர் கருத்துக்களே காட்டப்பெறுகின்றன. தமிழில் எழுதப்பெறும் ஆய்வாளர் கட்டுரைகளிலும் இதே நிலைதான். இது மொழியியலுக்கும் பொருந்தும். இவ்வாறு காட்டப்பெறுவதற்குக் கரணியம் மேலை ஆய்வாளர்கள் இவ்வாய் வில் கருத்துன்றினர்; வளர்த்தனர். இதே நேரத்தில் தற்காலத்தில் தமிழை அதன் கிளை மொழிகளோடும் பிற உலக மொழிகளோடும் ஒப்பிட்டு ஆராய்ந்த தமிழறிஞர் கருத்துக்களையும் முடிவுகளையும் சான்றாகக் காட்டுவதில்லை. இவர்கள் பெயர்களும் அறிமுகப் படுத்தப்பெறவில்லை. தற்கால மொழி ஆய்வாளர் (Linguistics) மொழி யியற் பேராசிரியர் அனைவரும் கவனஞ் செலுத்தாமையாலே கருத்து மாறு பாட்டாலோ ஆழ்ந்து நோக்கவேண்டியிருக்கின்ற முனைப்பின்மையாலோ மூளை உழைப்பைப் பயன்படுத்த விரும்பாமையாலோ தழிழறிஞர் கருத்துக் களைக் கணக்கில் கொள்வதில்லை. தமிழ் மொழியை ஆராய்வோர் இலக்கிய இலக்கண வழக்கு, பேச்சு வழக்கு ஆகியவற்றை இணைத்தே ஆராய்ந்துள்ள னர். தற்கால மொழியியலார் பேச்சு வழக்கு கொண்டே மொழிகளை ஆராய் வது போதுமானது என்று கருதுவோர். இதனாலும் தமிழ் ஆய்வாளர் கருத் துக்களைக் கணக்கில் கொள்வதில்லை. இங்கு தமிழ் மொழி ஆய்வாளர்களை நினைவுகூர்வது இன்றியமையாத தாகின்றது. கீழ்வரும் பெயர்களுடன் அவரவர்தம் ஆய்வில் எழுந்த ஒரிரு நூல்களையும் தர நேர்கின்றது. - -- - 48 எம். எசு. துரைசாமி: கலைக்களஞ்சியம் தொகுதி 8 பக் 589 57 go-a-8