பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் எசு. வையாபுரிப் பிள்ளை. சொற்கலை விருந்து' பன்மொழிப்புலவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்: மேலைநாட்டு மொழியியல் (Linguistic) தமிழில் அறிமுகம் செய்து பல கட்டுரை பேராசிரியர் முனைவர் மு. வரதராசனார் 1 மொழியியல் 2 மொழி வரலாறு' மற்றும் திருசிரபுரம் பால்வண்ண முதலியார், சென்னை வீரபத்திர முதலியார் முதலியோர் இன்னோர் தொல்காப்பியம், சங்க இலக்கியங்களில் பயின்றோர் தமிழ்த்தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் சங்க இலக்கியங்களை அச்சிற் கொணர்வதற்கு முன்னரே ஓலைச்சுவடிகளில் பயின்றோர். இன்னோர் தமிழை அதன் கிளை மொழிகளுடனும், இந்திய மொழிகளுடனும் ஒப்பீடு செய்தோர். பல அரிய முடிவுகளைத் தந்துள்ளனர். சில பகுதிகளில் ஒருமித்த பாதை இல்லை என்றாலும் தமிழ் மூல மொழி என்பதற்கு உறுதியான கருத்துக்களும் சானறுகளும் தந்துள்ளனர். சிறப்பாக மொழிஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணர் தம் கூர்த்த மதியால் தமிழின் வேர்ச்சொல்லை வரையறுத்துப் பிறமொழி வேர்ச்சொற்களுடன் ஒப்பிட்டு தமிழே உலக முதன் மொழி என்று நிறுவியுள்ளார். - - புகழுடம்பில் நிற்கும் இன்னோர் அன்றி, வாழும் மொழியறிஞர் இரு வரைக் குறிப்பிட வேண்டும். வழக்கறிஞராகத் தேறிய மொழியறிஞர் திரு ப. அருளி வேர்ச்சொல் ஆய்வுகொண்டு தமிழைப் பிற மொழிகளுடன் ஆராய்ந்து வருபவர். 'அருளி ஆற்றிய மொழியியல் உரைகள்' என்னும் தலைப்பில் ஐந்து தொகுதிகளை வெளியிட்டு 50 சொற்களின் தெளிவைத் தந்தவர். தற்போது தமிழ்ப் பல் கலைக் கழகத்தில் 'தனித்தமிழ் அகரமுதலி'யை உருவாக்குபவர். மற்றொருவர் இலக்கியச் செம்மல், பெரும்புலவர் இரா. இளங்குமரனார் ‘வாழும் பாவாணர்' என்று போற்றப்படுபவர். பாவாணர் வழி தமிழ் மூலங் களை ஆய்ந்து வெளிப்படுத்தி வருபவர். - . . . . . புகழுடம்பில் நிற்கும், வாழும் இவ்வாய்வாளர்கள்தம் கருத்துக்களையும் கொண்டே உலக முதல் மொழியைக் காணவேண்டும்; காண X 59.