பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழியறிஞர்களில் கிரேக்க மெய்ப்பொருளறிஞர் அரிசுடாடிலை மொழி யியல் அறிஞராகக் குறிப்பது இவர் முதலில் மொழி இலக்கணத்தை வரம்பு செய்தவர் என்பது கொண்டே இலக்கணம் மொழியியலுக்குப் புறம்பான தன்று. இலக்கணம் மொழியியலின் முதற்கூறு. தொல்காப்பியம் இலக்கண நூல் எனப்பெறினும் அது மொழியியல் தொடர்பற்றது என்றால் அது தவறான முடிவாகும, சொல்லை உருவாக்கும் எழுத்தின் இலக்கணம் கூறும் இயலுக்கு எமாழி மரபு' என்று தலைப்பிட்டதே மொழியியல் கூறை அறிவிப்பதுதான். 'மூன்றே மொழி நிலை தோன்றிய நெறியே' என்னும் மொழித் தொடர்களைக் கூறுவது 'மொழி நிலை என்னும் சொல்லால் மட்டுமன்றி, தன்மையாலும் மொழியியலின் அறிவிப்பே. எழுத்தின் பிறப்பைக் கூறும், 'உந்தி முதலா உந்து வலி தோன்றி என்னும் நூற்பா மொழியின் முனைப்பான ஒலி எழுத்தின் தோற்ற நுணுக் கத்தைத் தெரிவிப்பது எவ்வாறு மொழியியலினின்று பிரிந்ததாகும்? ‘மெய்யினியற்கை புள்ளியொடு நிலையல் (தொல்-எழுத்து 15) என்று எழுத்தின் வரிவடிவம் கூறும் நூற்பா மொழியியலின் கூறு அன்றோ? மொழி என்பது அதனை ஏற்போனால்தான் பயன் கொள்கின்றது. மொழியை சொல்லை உரைப்போன் கருத்தை ஏற்போன் உணரும் நிலையுடன் பொருத்திக் கூறப்பெற்ற உணர்ச்சி வாயில் உணர்வோன் வலித் தே (சொல்387) என்னும் நூற்பா மொழியியலின் மறு கூறு செல்வதன்றோ? இவ்வாறு தொல்காப்பியத்தில் பரவியுள்ளவற்றைக் காணின் தொல்காப்பியம் மொழியியல் பகுதி கொண்ட தே என்று அறியலாம். 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் மேலை நாடுகளில் கிரேக்க இலத்தீன் மொழிகளைக் கற்பிக்கும் கல்வியாக மொழிப் பாடம் தோன்றியது. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத் தில்தான் அறிஞர் கிரிம் என்பாரால் மொழியியலுக்கு விதிப்பு உண்டாகி அவர் மொழி நூல் வழி கிரீம் விதி' (Grims' Law) G3s songjuuji. - மிகப்பழங்கால மொழியறிஞர் என்று அரிசு -Fಿನಾಂಕ கொண்டாலும் அவர் கி. மு. நான்காம் நூற்றாண்டினர். வடமொழிக்கு இலக்கணம் வகுத்த பாணினி கி.மு. ஐந்தாம் நூற்றாண் டினர்.