பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

றும் உணரவில்லை ' என்பதாகும். இது நூற்றுக்கு நூறு உண்மை, இவருக்கு வழிகாட்டி மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் ஆவார். பாவாணர் வேர்ச்சொல்லின் மூல ஆணிவேர் கண்டறிந்தவர். ' உகரச் சுட்டினின்று 'உல்’ என்னும் ஒப்புயர்வற்ற மாபெரும் மூலவடி தோன்றிற்று. அது பின்பு உகரத்தோடு கூடி மொழி முதலாகும் ஆறு மெய்யோடும் சேர்ந்து, குல், சுல், துல், நூல் புல், முல் என்னும் அறு பெருங்கிளைகளையும் தோற்று வித்தது ' என்று அறிவித்தமை மொழி உலகில் வைரம் பாய்ந்த கருவூலக் கருத்து ஆகும். இவர் தொடர்பின்றித் தனியே ஆய்ந்த நல்லூர் ஞானப்பிரகாசர், ' இடம்பற்றியனவாய், தமிழ் மக்களின் ஆதிப் பேச்சுக்களா. எந்தமிழ் மொழிப்பரப்பு முழுதினுக்கும் மூல வேர்களாய் நின்ற சொற்கள் இலக்கண ஆசிரியரால் சுட்டுக்கள் என அழைக்கப் படுபவைகளாம் ” என்று அ, இ, உ முன்றுடன் எகரத்தை யும் சுட்டாகக் கொண்டு ஆய்ந்தார். இக் கருத்தும் 'சுட்டொலி களே மொழி முலம்' என்னும் கருத்தை உறுதி செய்வதே. பாவாணருக்கு முந்தியவராக முதலில் தமிழில் 'மொழிநூல் எழுதிப மாகறல் கார்த்திகேய முதலியார் சுல்' என்பதை அடியாகக் கொண்டு, “ எல்லாச் சொற்களும் அச் சுல்' என்னும ஓர் வியாபக வி பற்கை முதனிலையினின்றே பிறந்து விரிந்து அழகு செய்கின்றமையின் விச்சாதிபதி (வித்தைக்கெல்லாம் - சொல்கல்விக்கு - அதிபதி) சூரியனேயாவான் ' என்று கண்டார். இச் சுல்' என்பதே, கல்-சுள்-சுர்-சூர்-சூரி- சூரி-அன்-சூரியன் என்றாயிற்று. இக் கருத்தும் பாவாணர் கண்ட சுட்டெ ாலி மூலம் என்னும் கருத்திற்கு இயைபானது. 55 56 57 58 அருளி ஆற்றிய மொழியியல் உரைகள் முதல் தொகுதி பக். 10 ஞா. தேவநேயப் பாவாணர் : முதல் தாய்மொழி பக். 30 நல்லூர் ஞானப்பிரகாசர் : தமிழ் அமைப்புற்ற வரலாறு பக். 11 மாகறல் கார்த்திகேயனார் : மொழி நூல் பக். 65 73 35-a-10