பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க இலக்கியங்களை ஆழமாகக் கற்றார். இவரை ஒருமுறை தமிழ்நாட்டுச் செடி ம.இயற் பேராசிரியர் முனைவர் கு. சீனிவாசன் என்பார் கண்டபோது, 84 வயதில் தமிழைக் கற்று ஆராய்ந்துள்ளிர்கள். இன்னும் 16 ஆண்டுகள் வாழ்ந்தால் இன்னும் எத்தனை மொழிகளைப் படிப்பிர் கள்” என்று வினவியபோது, அவர், “ தமிழைக் கற்ற பின்னர் வேறு மொழிகளைக் கற்க வேண்டியதில்லை. அது கொண்டே பல மொழிகளின் அறிவையும் பெற்றுவிட முடியும் என்று கண்டுள்ளேன் ” என்றார்.' இக்கருத்துக்களை ஒன்றுகூட்டி நோக்கினால் உலக மொழிகளில் தமிழ் இழையோட்டமாக ஊடாடி நிற்பதை உணரலாம். இந்த இழையோட்டத்தில் அதற்கொரு தனித்தகுதி உள்ளமை புலப்படும். அதனைத் தாய்மைத் தனித் தகுதியாகக் கொள்ளலாம். இத்தகுதி கொண்டு உலக முதன்மொழி நிலையில் அதனை வைத்து ஆராயவேண் டும். மொழியியலார் உலக மொழிகளைப் பகுத்தமைத்துள்ள மூன்று தலைக் குடிகள் ஆரியம், சேமியம், துரேனியம் அன்றோ? இம்மூன்றினுள் உலகத் தொன்மை மொழிகள் அனைத்தும் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் உலக முதன்மொழியாக வேண்டும். ஏதேனும் ஒரு மொழி அறவே வழக்கற்றுச் சுவடும் தெரியாமல் அழிந்திருக்கவும் கூடும். லவுகின்றவற்றைக்கொண்டே ஆராய முடியும். எனவே, மூன்று தலைக்குடி மொழிகளில் தொன்மை வாய்ந்த சிலவற்றின் காலத்தகுதி கொண்டு, எது உலக முதன் மொழிக்களத்திற்கு உரியது என்று தேர்ந்து அறிய வேண்டும். இத்தேர்விற்கு எது எது முதன் மொழிக்களத்தில் அமையத் தகுதி கொண்டது என்று ஒவ்வொன்றையும் கண் டு தகுதி அற்றவற்றை ஒதுக்கிக் காண்பதன் மூலம் இறுதிப்படும் இரண்டை முதன்மைக் களத்தில் நிறுத்தி அவற்றுள் ஒன்றைத் தேரலாம். இங்கு, இத்தலைக்குடிகள் மூன்றில் ஒரு குடும்ப மொழியாகத் திராவிடப் பெயரில் இருந்த தமிழை நாம் பிரித்து அதனைத் 'தமிழம்' என்னும் தலைக் குடியாக வைத்து மூன்றை நான்காகக் கொண்டதை நினைவுகூர்ந்து கொள்ள வேண்டும். - இத்தலைக்குடிகளில் உள்ள மொழிகளில் ஏதும உலக முதன்மொழி என்று மொழியறிஞர்களால் அறிவிக்கப்பெறவில்லை. மொழிஞாயிறு பாவாணர் 'தமிழ் முதன்மொழி என்று கண்டறிவித்துள்ளார். இதன் உண்மை 8.1 கு. சீனிவாசன் : செய்தி மலர், தமிழ்ப் பல்கலைக் கழகம் 75