பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யும் காணப்பெற வேண்டும். சிறந்த மொழியறிஞர் எனக் குறிக்கப்பெறும் அறிஞர் மாக்சு முல்லர், ' மூன்று தலைக்குடி மொழிகளும் ஒரே மூலத்தைக் ೧5757-6ುಖ “፩g என்னும் கருத்தைத் தந்துள்ளார். ஆனால், அம்மூலம் எது எனறு காண வில்லை. அவர் எடுத்துக்கொண்டபடி அம்மூன்றில் துரேனியத் தலைக்குடி யில் உள்ள குடும்பங்களில் திராவிடப் பெயரில் தமிழ் இருப்பதால் அஃதும் வேறு ஒரு மூலத்தைக் கொண்டது என்பதே அவர் கருத்தாகக் கொள்ளவேண் டும். ஆனால், சங்க இலக்கியம், தொல்காப்பியம் இவற்றிற்கு முந்தியனவாய்க் கிடைத்துள்ள சில இலக்கியச் சிதறல்கள் முதலியவற்றை அவர் காணாமையால் தமிழ் மொழியின் கால மூலத்தை அவரால் ஆராய முடியாமல் போயிற்று எனலாம். மற்றொன்றையும் இங்கு நினைவுகூர வேண்டும். அது முன்னர் ஆதார மொழி என்று ஆய்ந்த ஆய்வு. அனைத்து மொழிகளுக்கும் 'ஆதார மொழி ஒன்று இருந்திருக்க வேண்டும்' என்னும் கருத்துப்படியும் எவருக்கும் அகப்படாமல் ஒரு மூல முன்மொழி ஒளிந்து கொண்டுள்ளது. அறிஞர் மாக்சு முல்லர் கருத்துப்படி மூன்று தலைக்குடிகளும் ஒரு மூலத்தன என்ற வகையில் ஒவ்வொரு தலைக்குடியாகக் காணலாம். முதலில் துரேனியத்தை எடுத்துக்கொண்டால் துரேனியம் என்பது தலைக்குடி எனக் கொள்ளப்பட்டதற்கு மூலமே அதில் திராவிடமொழிக் குடும்பம் இணைக்கப்பட்டமைதான். அதனை விடுவித்துக்கொண்டமையால், எஞ்சி யிருக்கும் குடும்ப மொழிகளுள் துருக்கி ஒன்றே ஓரளவில் வளமும், செம்மையும் தொன்மைக் குறிப்பும் கொண்டது. அஃதும் தன் எழுத்தாக அரபி எழுத்தைக் கொண்டுள்ளது. அது சில தொடர்புகளில் தமிழ் போன்று இனிய ஒலியுடை யது: இலக்கண அமைப்பிலும் ஓரளவில் ஒற்றுமைக் குறிப்பு கொண்டது. இவற்றை விடுத்துப் பிற முனைகளை நோக்க இது தொன்மையில் தனக்கென ஒரு தகுதி கொள்ளாதது. எனவே, துரேனியம் தன் தனி முழு வலிமையில் உலக முதன் மொழிக் களத்தில் அடி வைக்க இயலாதது. அடுத்து சேமியம் என்னும் தலைக்குடியில் குறிப்பிடத்தக்க குடும்பங்கள் ஈப்ரு என்னும் எபிரேயம், அரபு, பாபிலோனியம் என்பன. இவற்றுள் தொன் மைச் சிறப்பு கொண்டது எபிரேயம். இது யூதர் மொழி. இதன் முதல் நூல் விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் மோசே குறிப்புக்களாகும். விவிலியம் 62 wirákopi suff: Lectures on the Science of Languages, Wol, I, P. 375 76