பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி. பி. அளவினதே. எவ்வாறு நோக்கினும் எ பிரேயம் கி. மு. 3000 ஆண்டு களே தொன்மை கொண்டது. இவ்வாறு கொள்வதற்கு இம்மொழியில் மெய் எழுத்துக்களே இருப்பதும் உயிர் எழுத்துக்கள் தொடக்கத்தில் இல்லாமையுமே சான்றாகும். கி. பி.இல்தான் உயிர் எழுத்துக்கள் அரபிச் சொற்களிலிருந்து எடுத்துச் சேர்க்கப்பெற்றன. இவ்வகையில் எபிரேயம் கலப்புள்ளதால் மிகத் தொன்மையானதன்று. இந்த மிகத் தொன்மையிலிருந்து விலகுவதால் சேமியத் தலைக்குடி உலக முதன் மொழிக் களத்தில் ஏறி நிற்க வலிமையற்ற தாகிறது. ஆரியத் தலைக்குடியில் சமற்கிருதம், இலத்தீன், கிரீக், சீனம் (இந்தோ ஐரோப்பியத் தொகுப்பில்) குறிக்கத்தக்கவை. இவை தொன்மையான இலக்கிய வளம் உடையவை. சொல்வளமும் கொண் டவை. இவற்றை ஆராய்ந்த மொழியறிஞர் அனைவரும் சமற்கிருதத்தைக் கொண்டே ஒப்பிட்டு ஆராய்வா ராயினர். அறிஞர் யோன்சு (Jons) என்பார் 1796இல் ' வடமொழி (சமற்கிருதம்) கிரேக்க மொழியைவிட நிறைவுள்ள தாகவும். இலத்தீன் மொழியைவிட வளமுள்ளதாகவும், இவ் விரண்டு மொழிகளைவிடத் திருத்தமுள்ளதாகவும் உள்ளது ' என்றாா. சொற்பிறப்பு, ஒலிமூலம், சிற்றளவில் எழுத்தமைப்பு முதலிய வகையில் சமற்கிருதம் பிற ஆரிய மொழிகளுக்கு முந்திய நிலையிலே பேசப்படுகின்றது. சீனத்தை இந்திய ஐரோப்பிய மொழிக்குடும்பத்தில் வைத்தனர். பிற ஆரிய மொழிக்குடும்பத்தினின்றும் சினம் வேறுபட்டதே. தனக்கென்று ஒரு தனித்தன்மை கொண்டது. அதனுடன் திபேத்தியம், பர்மியம், தாய்லாந்து முதலிய மொழிகளும் இணைத்துப் பேசப்பெற்றன. இவற்றில் சீனத்திற்குத் தொன்மை வளம் உண்டு. ஆனால் அதன் எழுத்து வரலாறு மிகக் குழப்ப மானது. நிலைத்த எழுத்தில் தொடர்ந்தது என்று கொள்ள முடியாது. மேலும் இதன் பேச்சு மொழி வேறு; எழுத்து மொழி வேறு. சீன எழுத் திற்குப் பற்றுக்கோடாக ப-க்வ (Ba- Kua) என்னும் எட்டுக் குறியீடுகள் ஃபு-இசி (Fu-Hsi) என்றும் சீன மாமன்னனால் உருவாக்கப்பெற்றவை என்பர். அவர் காலம் பலவாறாகக் குறிக்கப்படினும், கி. மு. நாலாயிரம் என்பர். இதிலும் வேறு ஒரு கருத்து உண்டு. மற்றொரு மாமன்னனாகிய ஊஅங்-தி (Huang-thi) என்பவரின் அமைச்சராகிய டிசங்-சி (Tsang-Si) என்பவரே சீனமொழியை உருவாக்கினார் எனவும் அவர் காலம் கி. மு. முப்பது அளவு என்று அதிக அளவில் உறுதியாகச் சொல்வர். எனவே சீனத்தின் 77.