பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

' முண்டா மொழிகள் பேசுவோர் திராவிட மக்களே '67 என்று கண்டறிந்த உண்மையை வழங்கியுள்ளார். சென்னை ப் பல்கலைக்கழகச் சமற்கிருதப் பேராசிரியராயிருந்த முனைவர் வே. இராகவன் 'சமற்கிருதத்தில் முண்ட திராவிட மொழிக் குடும்பங் களின் அம்சங்கள், சொற்கள் புகுந்திருக்கின்றன ' என்றமையும் இத்துடன் நோக்கத்தக்கது. எனவே, இந்தியாவெங்கணும் குமரிக்கோட்டிலிருந்து தோன்றிப் பரவிய தொன்மைத் தமிழர் வாழ்க்கையின் சுவடுகளே உள்ளன. ஆங்காங்கு புதை பொருளாகவும், அகழ் பொருளாகவும் கடலடிக் கண்டுபிடிப்புகளாகவும் புலப் பட்டுள்ள தமிழ்ச் சின்னங்கள் தமிழ் உலகளாவியதை வெளிப்படுத்தி வருகின் றன. எனவே, அவ்வாறு பரவிய தமிழ் மைய ஐரோப்பியப் பகுதிகளில் அவ்வச் சூழலின் வெப்ப தட்பத்திற்கு ஏற்ப வேறுபட்டன. நாம் முன்னர் கண்டமைத்துள்ள ஒலியியல் மொழி விளக்கத்தில் குறித்துள்ளபடி வெப்ப தட்பத்தால், மண்வாகால் நேர்ந்த உள்ளுறுப்புக்களின் சற்றுச்சற்றே வேறுபட்ட அசைவுகளால் ஒலியும், பலுக்கலும் சற்றுச்சற்றே வேறுபட்டுப் பல மொழிகள் உருப்பெற்றன. அவ்வாறு உருவானவற்றில் ஒன்றே மைய ஐரோப்பாவில் உருப்பெற்ற வேதமொழியின் மூலமாகும். இவற்றை ஆய்ந்து வேத மொழியையும் ஆய்ந்தோர் அதற்கும் முலமான ஒரு மொழி இருந்திருக்க வேண்டும் என்றனர். எனவே, வேதமொழி வழிவந்த சமற்கிருதமோ பிராகிருதமோ இவற்றின் வளிப்பிறவோ தமிழ் மூலங்கொண்டவை என்று கொள்வதில் தவறில்லை. ஆனால், மொழி உணர்வில் ஆழங்கொண்ட மறைமொழியார் தமிழ் மொழிச் சொற்களைத் தம் வட மொழி உருவாக்குவதில் நாட்டங்காட்டினர்; ஒரளவில் வென்றனர் எனலாம். பல நூற்றுக்கணக்கான சொற்களை ஏற்றி உருவாக்கினர். தமிழ் நிலத்திலும் அவ்வேலையைச் செய்தனர். ஐம்பது ஆண்டுகட்கு முன்வரையிலும் காட்சி (காண்-சி), மாட்சி (மாண்-சி) என்னும் தமிழ் காகஷி என்றும் மாகூ என்றும் வடவெழுத்தால் குறிக்கப்பெற்று வட மொழியாகவே நம்மவராலும் கொள்ளப்பெற்றமையை எண்ணிப் பார்க்கலாம். இன்று அவைகள் மாற்றம் பெற்றிருப்பினும், முழுத்தம் மாறிய முகூர்த்தம், அமிழ்தம் மாறிய அமிர்தம் முதலிய சொற்கள் இன்னும் தமிழ் என்றே தமிழர்க ளாலும் ஏற்கப்படாத அளவில் மறைந்துள்ளதை எண்ணலாம். மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ்ச் சொற்களை அதன் மூல வேர்ச்சொல்லுடன் பொருத்திக்காட்டி வடசொல் 67 LW. &. 96-four & sourism f: Stone age in India 6.8 வே. இராகவன். கட்டுரை: கலைக்களஞ்சியம் தொகுதி 4 பக். 463 84. дѣ-a-11