பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதனதன் பாலினத்திற்கேற்ப அமைந்தமை தமிழின் ஒழுங்குமுறை. வட மொழியில் மனைவியைக் குறிக்கும் 'தாரம்’ என்பது சொல்லளவில் ஆண் பால். மனைவியைக் குறிப்பது பார்யை. களத்திரம் என்னும் சொல் அலிப்பால். இதுபோன்றே இரண்டற்கும் அமைந்துள்ள வேறுபாடுகள் வடமொழி இலக்க ணம் நெறியமைப்பற்றதைக் காட்டுகின்றன. தமிழில் அமைந்த வாழ்வியல் இலக்கணமாகிய பொருளிலக்கணம் வட மொழியில் இல்லை என்பது மட்டுமன்று; உலகில் எம்மொழியிலும் இல்லாதது. சுருக்கம் கருதி இவ்வாறு நிறுத்தும்போதே மற்ற உலக மொழிகளுக்கு அவை தவிர வேறு ஒரு ஆதார மொழி இருப்பதாக அறிஞர் பெருமக்கள் கண்டுள்ளதை யும் இங்கு நிறுத்தித் தமிழின் முதன்மையை நிறுவலாம். இதனை மொழிஞாயிறு பாவாணர் தம் தமிழ் முதன்மொழி என்னும் நூலில் விரிவாக ஆராய்ந்து உறுதியாக அறுதியிட்டுள்ளார்: இலக்கியம், இலக்கணம் என்னும் தமிழ்ச்சொற்களே வடமொழி என்று நினைத்ததும் உரைத்ததும் எழுதியதும் அச்சொற்களின் வேர்ச்சொல்லால் அடி படுபவற்றை இங்கு அடுத்து வரும் வேர்ச்சொல் பகுதியில் காணலாம். தமிழ்-வடமொழி எழுத்துத் தோற்றம் முன்னர் உணர்ச்சியொலியில் எழுத்து தோன்றியமை குறிக்கப்பெற்றது. அவை உயிரின இயல்பின் பிறப்பொலி என்பது ஒரு முதன்மொழிக்குரிய சின்னம். மேலே குறித்தமை போன்று எகர, ஒகரம் வடமொழியில் இடம் பெறாமையும் பின்னர் இணைத்துக்கொள்ளப்பெற்றமையும் உலக முதன் மொழிக் களத்தில் வட மொழி பின் நிற்பதாகின்றது. வடமொழியில் முதல் மறைமொழியாகிய இருக்கு மறை ஒலியெழுத்துக் களால் வாயால் ஒலிக்கப்பட்டுக் காதால் கேட்கப்பட்டுக் கேட்டவர் சொல்ல ஏற்பவர் ஒத, ஓதத் தொடர்ந்த வாய்மொழி நூல். வரிவடிவ எழுத்தில் எழுதப் பெறாதது. அதனால், இது தமிழிலும் எழுதாக் கேள்வி' எனப்பெற்றது. பாண்டியன் ஏனாதி நெடுங்கிள்ளி என்பான், -- - ' எழுதாக் கற்பின் நின் சொல்லுள்ளும்.' என்று பாடியதைக் குறுந் தொகையில் காண்கின்றோம். - - 70 பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன்: குறுந்தொகை 156-5 83