பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

" சுருதி மறை சாகை எழுதாக் கேள்வி " என்று சேந்தன் திவாகரம் முதலிய உரிப்பனுவல்களும் பெயர்ப்பட்டியலிட்டன. இப்பெயர்களும், சுருதிகாதால் கேட்பது; மறை-மறைவாக உரைக்கப்படுவது என்னும் பொருள்களைத் தருவன. ஏன் எழுதப்படவில்லை? ஒன்று வரிவடிவ எழுத்து இல்லை' எனலாம். அடுத்து, 'வரிவடிவில் எழுதி வைத்தால் எழுதுபவன் ஏட்டைக் கெடுப் பான்; எழுத எழுதப் பிழைபடும்; எழுத்தில் இருந்தால் பிற இனத்தாரும் கண்ட படி படிப்பர்; சிதைந்து போகும்; அதன் துய்மை கெடும்; அதன் தெய்வத் தன்மைக்கு அது கூடாது' எனலாம். இவ்விரண்டும் பொருந்துவதே. ஆனால், எழுதினால் ஏடு கெடும் என்பது போன்று படிப்பவனும் பாட்டைக் கெடுப்பான். அத்துடன் அந்தக் கருத்து செத்துவிட்டது. இருக்குமறை அச்சில் வந்து அம்மறையவரால் மிலேச்சர் எனப்பட்டாரும் படித்து ஆய்ந்து பிய்த்துப் பிய்த்துப் பார்த்து விட்டனர். - பலர் பலபடியாக எழுதுவதால் சற்றுச் சற்றாகச் சிதையும் என்னும் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதே. ஆனால், வரலாற்று ஒளியும், ஆய்வுப் புலப்பாடும் வரிவடிவ எழுத் தில்லாததால்தான் எழுதப்படவில்லை என்பதையே பளிச்சிடுகின்றன. சமற்கிருதப் பேராசிரியர் வடபுலத்து இராகுல சாங்கிருத்தியாயன் என்பார் ஆய்வியல், அகழ்வியல் வல்லுநர். 15 ஆண்டுகள் சோவியத்துஇலெனின் பல்கலைக் கழகத்தில் சமற்கிருதப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தம் வாழ்வை மாந்தரின வரலாற்றை ஆய்வதற்கே ஈந்தவர். அவ்வரலாறாக நூல்கள் எழுதியுள்ளார். அவற்றுள் 'வால்காவிலிருந்து கங்கை வரை என்பது குறிக்கத்தக்க ஒன்று. தமிழிலும் வெளிவந்துள்ளது. இது படிப்போர் அலுக் காமை கருதிக் கதைப்பாங்கில் எழுதப்பெற்றது. கி.மு.6000 முதல் கி. பி. 1942 வரையிலான மாந்தரின வரலாற்றை உண்மை பொதியத் தருவது. இதில் கி.மு. 1800இல் அங்கிரா என்னும் பகுதி உள்ளது. இரண்டு ஆரிய இளைஞர் ஒருவர் கிழக்கிலிருந்தும், மற்றவர் தெற்கே தமிழகப் பகுதியிலிருந்தும் அவ்வத் 84