பக்கம்:சூரப்புலி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 பார்த்தார். அவர்கள் முன்னல் சென்று திரும்பிய பகுதியிலே மேலிருந்து மலை சரிந்து காளிகங்கையை நோக்கி விழுந்துகொண் டிருந்தது. மரங்களும் கற்களும் தலைகீழாகப் பறந்தன. சரிகின்ற மண்ணிலே புகைபோலப் புழுதி கிளம்பியது. துறவி தங்கியிருந்த குகைப்பகுதியும் நடுங்கத் தொடங்கியது. ஆனால் நல்ல வேளை பாக அந்தப் பகுதி சரியவில்லை. இமயமலைச் சாரல்களிலே இவ்வாறு குன்றுகளும் மலேப்பகுதி களும் அடிக்கடி இடிந்து விழுவதுண்டு. பெரிய மழைக்குப் பிறகு இடிசல் அதிகமாக இருக்கும். அதிலே அகப்பட்டவர்கள் கதி அதோ கதிதான். துறவிக்கு முன்னுல் சென்ற சூரப்புலி இடிசல் ஏற்படுவதை முன் கூட்டியே உணர்ந்துகொண்பது. தரைப்பகுதி லேசாக அதிர்ச்சி கொள்வதை அதன் பாதங்கள் தெரிந்து கொண்டன. நீலகிரி மலேச்சாரல்களிலே சிறிய இடிசல்கள் ஏற் படுவதை அது கண்டிருக்கிறது. அந்த அனுபவம் அதற்கு இப் பொழுது உதவிற்று. அதல்ை சூரப்புலி தன் உயிர் தப்பியதோடு துறவியையும் காப்பற்ற முடிந்தது. துறவி சூரப்புலியைத் தட்டிக் கொடுத்தார். சுமார் ஒரு மணி நேரம் அந்தக் குகையிலேயே இருக்கவேண்டியதாயிற்று. பெரிய இடிசல்களுக்குப் பிறகு சிறிய அளவிலே மண்ணும் கல்லும் சரிந்து கொண்டே யிருந்தன. அப்படிச் சரிவது நின்ற பிறகு துறவி யாத்திரையைத் தொடர்ந்தார். மால்ப்பா கிராமத்திற்குப் பக்கத்திலே ஒரு பெரிய குகையுண்டு. அன்றிரவு துறவி அங்குத் தங்கினர். மால்ப்பாவிலிருந்து கர்ப்பியாங் பன்னிரண்டு மைல். பல ஏற்றங் களுக்குப் பிறகு அந்த ஊரைச் சேர வேண்டும். பல இடங்களிலே வழி ஒற்றையடிப் பாதைக்குமேல் இராது. எதிரிலே வியாபாரிகளின் ஆட்டு மந்தைகளும் குதிரைகளும் வரும். திபெத்தில் இருந்து வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருக்கும். அவற்றுக்கு வழி விட்டுப் பாறையோடு பாறையாக ஒட்டி நின்றுகொள்ள வேண்டும். இவ்வாறு பன்னிரண்டு மைல் நடந்து துறவி கர்ப்பியாங்கை அடைந்தார். கர்ப்பியாங் கடல்மட்டத்திற்கு மேல் பத்தாயிரத்து ஐநூறடி உயரத்தில் இருக்கிறது; இனிமேல் கயிலாயகிரிக்கு அந்த உயரத் திற்கு மேலுள்ள பகுதியில்தான் பிரயாணம் செய்ய வேண்டும். ஆதலால். யாத்திரையின் போக்கே அது முதல் மாறிவிடும். சூரப்புலி கு-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/100&oldid=840544" இலிருந்து மீள்விக்கப்பட்டது