பக்கம்:சூரப்புலி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 தன் வாழ்க்கையில் எத்தனையோ அனுபவங்களைப் பெற்றிருக்கிறது. இதுவரையிலும் இல்லாத ஒரு புதிய அனுபவம் சூரப்புலிக்கு இப்பொழுது காத்துக்கொண்டிருந்தது. அல்மோராவிலிருந்து சுமார் 150 மைல் தூரம் வந்தாகிவிட்டது, இன்னும் 150 மைல் போனல்தான் கயிலாய கிரியை அடையலாம். கர்ப்பியாங்கோடு இந்தியாவின் எல்லே முடிகின்றது. அதற்குமேலே இருக்கும் பகுதி திபெத்து. திபெத்தைவிட உயரமான பீடபூமி இருப்பது அரிது. குளிர் காலத்திலே ஒரே வெளுப்பாக உறைபனியால் மூடிக் கிடக்கும். அந்தச் சமயத்திலே அங்குப் புல், பூண்டு எதுவும் இராது. ஒரே பனிப் பால்வனம் என்று: அதைச் சொல்லலாம். வெயிற்காலத் திலே உறைபனி உருகி ஓடைகளாகவும் ஆறுகளாகவும் ஓடும். அப்போதுங்கூட எல்லாப் பகுதிகளிலும் உறைபனி உருகாது. தாழ்வான பகுதிகளில் மட்டும் தரையைக் காணலாம். குன்றுகள் சிலவும் உறைபனி இல்லாமல் வெறும் மொட்டைப் பாறைகளாகக் காணப்படும். சில குன்றுகளின் உச்சியிலேயிருக்கும். நிறையக் தயிரை ஊற்றி வைத்ததுபோல் உறைபனி மூடி, தரையிலே சில இடங்கள் மண் உள்ளதாகத் தோன்றும். ஆல்ை, அதன் அடியிலே உறைபனிப் பாறைகள் படலம் படலமாக இருக்கும். அவற்றின் அடிப்பகுதியிலே தண்ணீர் உருகி ஊற்றுப்போல வெளிவரும். உயர்ந்த மலேச்சிகரங்களுக்கு இடையிலே தேங்கிக் கிடக்கும் உறை பனி வெய்யிற்காலத்திலே உருகுவதால் உறைபனிப் படலமே ஒரு சிறிய மல் கீழே நகர்ந்து வருவதுபோல வேகமாக வருவதுண்டு. அந்தச் சமயத்திலே அதில் அகப்பட்டவர்கன் உறைபனிக்குள் அப்படியே மூழ்கிப் போய்விடுவார்கள். மேலும் திபெத்துப் பகுதியிலே அடிக்கடி உறைபனி பெய்யத் தொடங்கிவிடும். காற்றிலே இலவம் பஞ்சு மிதந்து வருவது போல இந்த உறைபனி மிதந்து வந்து தரையில் விழும். கொஞ்ச நேரத்தில் தரை எல்லாம் பஞ்சும் பொதிகள் மூடியதுபோல ஒரே வெளுப்பாக மாறிவிடும். அந்தச் சமயத்திலே அதன் வழியாகச் செல்வது மிகவும் கஷ்டம்: குளிரும் பொறுக்க முடியாது. அத்துடன் வேகமாகப் புயற்காற்றும் அடிக்கத் தொடங்கிவிடும். அந்தக் காற்று முகத்திலேயும் கைகளிலேயும் பட்டால் தோல் வெடித்துக் கறுத்துப் போகும். சில சமயங்களில் ஆலங்கட்டி மழை பெய்யத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/101&oldid=840545" இலிருந்து மீள்விக்கப்பட்டது