பக்கம்:சூரப்புலி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 தொடங்கிவிடும். அதில் அகப்பட்டுக்கொண்டால் துன்பம் இன்னும் அதிகமாக இருக்கும். இந்த மாதிரியான வழியிலே தங்க வசதி ஒன்றும் இராது. மலைகளில் உள்ள குகைகளில் தங்கலாம், அல்லது கூடாரமடித்து அதில் தங்கலாம். கர்பியாங்கில் கூடாரம் விற்கும். அதை வாங்கிச் செல்ல வேண்டும். துறவி அப்படி ஏற்பாடு ஒன்றும் செப்து கொள்ளவில்க்ல. மேலும், திபெத்துப் பகுதியிலே திருடர் பயம் அதிகம். கம்பாக்கள் என்ற கொள்ளக் கூட்டத்தார்கள் பனிப் பிரதேசத்தில் சுற்றிக்கொண்டிருப்பார்கள். பகலிலே பிச்சைக்காரர் களப்போல ஒன்றிரண்டு பேராக வந்து, பாத்திரை செய்வோரை அணுகிப் பிச்சை கேட்பார்கள். பிறகு, இரவிலே கொள்ளே அடிப் பார்கள். அந்தப் பகுதியிலே கம்பளி உடை மிகத் தேவையானது. அதைக் கைப்பற்றக் கொல் செய்யவும் அவர்கள் அஞ்சமாட்டார்கள். உணவுப் பொருள்களுக்காகவும் எதுவும் செய்யத் தயாராக இருப் பார்கள். ஆதலால், கர்பியாங்கிலிருந்து புறப்படுகின்றவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டமாகவே செல்லுவார்கள். கூட்டமாகக் கூடாரமடித்து வழியிலே தங்குவார்கள். கயிலாய கிரிக்கு வழிகாட்டுவதற்காகவும் தங்களேப் பாதுகாப்பதற்காகவும் ஆட்களுக்குப் பணம் கொடுத்துக் கர்பியாங்கிலிருந்து கூட்டிக்கொண்டு போவார்கள். துறவி அந்த ஏற்பாட்டையும் செய்துகொள்ளவில்லை. எந்த யாத்திரைக் கூட்டத் துடனும் சேர்ந்துகொள்ளவில்லை. அவர் கர்ப்பியாங்கிலிருந்து புறப் படுகின்ற காலத்தில் கயிலாய கிரி யாத்திரையை முடித்துக்கொண்டு அனவரும் திரும்பி வந்துகொண்டிருந்தார்கள். அப்பொழுது பாத்திரை போகின்றவர்களே தென்படவில்லை. வேண்டுமென்றே துறவி அந்தக் காலத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிருர். கடல்மட்டத்திலிருந்து 10,000 அடிக்கு மேலே செல்லும்போது காற்று லேசாக இருப்பதால் மூச்சு விடுவது சிரமமாக இருக்கும். எற்றங்களிலே ஏறும்போது மூச்சுத் திணறும்; தலே சுற்றும்; நெஞ்சு படபடவென்று அடித்துக்கொள்ளும். உடம்பின் சுமையே பெரிதாகத் தோன்றும். அதல்ை மூட்டைகளைச் சுமந்துகொண்டு செல்லுவது மிகவும் கஷ்டம். அதல்ை மூட்டை சுமப்பதற்குக் குதிரைகளையும் யாக் என்னும் கவரிமாடுகளையும் ஏற்பாடு செப்துகொள்வார்கள். கவரிமாடு என்பது மிகவும் பலம் வாய்ந்தது. அதன் உடம்பெல்லாம் சடை சடையாக மயிர் நீண்டு வளர்ந்து தொங்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/102&oldid=840546" இலிருந்து மீள்விக்கப்பட்டது