பக்கம்:சூரப்புலி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f00 அது முரட்டுக் குணம் உடையது. அதன் வாலில் குதிரை வால்போல மயிர் அடர்த்தியாக இருக்கும். அதைக் கொண்டுதான் நமது கோயில்களில் பயன்படுத்தும் வெண்சாமரம் செய்கிருர்கள். கவரி மாட்டின் பாலேயும் வெண்ணெயையும் திபெத்தியர்கள் உணவாகக் கொள்வார்கள். வெண்ணெயை உண்பதோடு முகத்திலும் பூசிக் கொள்வார்கள். துறவி, குதிரையோ கவரிமாடோ ஏற்பாடு செய்துகொள்ளவும் இல்லை. சில கம்பளித்துணிகளையும் போர்வைகளையும் கோதுமை LDT, சத்தும்ா அடங்கிய தகர டப்பாக்களேயும் மூட்டையாகக் கட்டிக் கொண்டார். ஆபத்திற்கு உதவும் மருத்துப் புட்டிகளேயும் சூரப்புலிக்கு வேண்டிய உணவுப் பொருள்களையும் மூட்டையில் வைத்துக்கொண் டார். கயிற்றுப் பாலத்திலே மூட்டையைக் கடத்துவதற்காக மலேப் புல்லேக்கொண்டு திரித்த நீளமான கயிற்றையும் வைத்துக்கொண்டார். கையிலே கூரிய இரும்புப் பூண்போட்ட ஊன்றுகோலப் பிடித்தார். கயிலாசபதிக்கு ஜே !' என்று உற்சாகமாகக் கோஷமிட்டுக் கொண்டு புறப்பபட்டுவிட்டார். சூரப்புலி பக்கத்திலே துள்ளிக் குதித்து நடந்தது. உறைபனிப் பகுதியிலே சில இரவுகளில் படுத்து உறங்க வேண்டி வரும். தசை ஜில்லென்று குளிர்ச்சியாக இருக்கும். சில இடங்களில் அப்படிக் குளிர்ந்து இருப்பதோடு சகதியாகவும் இருக்கும். அதிலே விரிப்பதற்கு நம் நாட்டுக் கம்பளம் உதவாது. திபெத்திலே கொத்துமா என்ற ஒரு முரட்டுக் கம்பளம் நெய்கிருர்கள். அதுதான் அந்த இடத்திற்கு ஏற்றது. கர்ப்பியாங்கில் கொத்துமா ஒன்றுதான் துறவி வாங்கினர். அதை அவர் தம் முதுகில் மூட்டைக்கு மேலே போட்டுக்கொண்டார். இவ்வாருகக் கர்ப்பியாங்கிலிருந்து திபெத்திற்குள்ளே அவருடைய கயிலாய கிரி யாத்திரை தொடங்கிற்று. கர்ப்பியாங்கிலிருந்து ஓர் இறக்கம் வருகிறது. துறவி சுமார் ஒரு மைலுக்கு இறக்கத்தில் நடந்தார். பிறகு காளி கங்கையின் கரையோரமாகவே கொஞ்ச தூரம் போக வேண்டும். அது ஒரு பள்ளத்தாக்கு. சுற்றிலும் மல்கள் உயர்ந்து நிற்கின்றன. அவற்றின் வழியாகப் பல அருவிகளும் ஓடைகளும் வேகமாக ஓடி வந்து காளிகங்கையில் கலக்கின்றன. உயரத்திலிருந்து நீர்வீழ்ச்சி பாக விழுகின்ற அருவிகள் அழகான காட்சியாக இருந்தன. அந்த அருவிகள் வேகமாக விழுவதல்ை சிதறி எழுகின்ற நீர்த்திவலைகள் புகைபோல ஆகாயத்தில் எழுந்தன. அந்தத் திவல்கள் மீது சூரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/103&oldid=840547" இலிருந்து மீள்விக்கப்பட்டது